73

பா + கல் = பாகல்,

'அய்யா யிகராந்தம்' என்பதனால், நி, சி, இலா என்னும் தாதுக்களின் பின், அனம், அகம் என்னும் பிரத்தியம் வந்து நயனம், நாயகம், சயனம், சாயகம், இலவனம், இலாவகம் எனவும்; 'அவ்வா வுகராந்தம்' என்பதனால், பூ என்னுந் தாது பவனம், பாவகம் எனவும் முடிந்தவாறு காண்க.

பிற பிரத்தியங்களானும் விகாரங் கருவியாகக் கொண்டு முடித்து வினைக்குறிப்பினும் காரகத்தினும் அடங்க எல்லாப் பெயரும் முடிக்க. 'விம்ம' என்று மிகுத்துச் சொல்லிய அதனால், பொருள் பாராதே சொல் முடிவைப் பார்த்து முடிக்கச் சொன்ன தாதுவெல்லாம் தமிழெழுத்தாற் சொன்ன என்பது.

(5)

65. காரிதத் தாதுக்கள்

ஆட்டாற்று தீற்றாதி தாதுக் களையடற் காரிதமென்(று)
ஓட்டா வறிக; உரையின் படியொப்பில் விப்பிபின்பு
மூட்டா வறிகா ரிதக்கா ரிதம்; முன்பிற் றாதுவின்கட்
காட்டா வறியவை காரிதக் காரிதக் காரிதமே.

(இ-ள்.) ஆட்டு, ஆற்று,  தீற்று முதலிய காரிதத் தாதுக்களாம். 'முன்பிற் கேவலத் தாதுவோடு இவற்றிற்கு வேறுபாடென்?' எனின், ஆடு என்பது கேவலத் தாதுவாய் அத்தொழிலையே மற்றொருவனைச் செய்வி என்னும் பொருண்மேல் வினைக்குறிப்பிலே பிரத்தியம் பண்ணி ஆட்டு எனவும், இவ்வண்ணம் ஆறு, ஆற்று, தின், தீற்று எனவும் வந்து வேறுபட்டன. இப்படியே ஊட்டு, காட்டு, மூட்டு, வாட்டு, ஏற்று, நாற்று, ஓட்டு, கூட்டு, சூட்டு என வரும். ஆடினான், கேவலத் தாது; ஆட்டினான், காரிதத் தாது. இவற்றின் பின்பு வி, பி என்னும் பிரத்தியங்கள் வந்தால், அவை காரிதக் காரிதத் தாதுவாய், ஆட்டுவி, ஆற்றுவி, தீற்றுவி, கேட்பிப்பி, வார்ப்பிப்பி, உண்பிப்பி, தின்பிப்பி என வரும். ஒரு சார் கருத்தாவையும் கருமத்தையும் வேறுபடுக்குமிடத்துங் கேவலக் கருத்தா, காரிதக் கருத்தா, காரிதக் காரிதக் கருத்தா எனவும்; கேவலக் கருமம், காரிதக் கருமம், காரிதக் காரிதக் கருமம் எனவும் வரும்.

உதாரணம் :-

உண்டனன், ஊட்டினன், ஊட்டுவித்தனன் எனவும்; உண்டது சோறு, ஊட்டினது சோறு, ஊட்டுவித்தது சோறு எனவும் கொள்க.