80

முடித்தல் தன்னின முடித்தல்.' இவை மூன்றும் உருவத்தாற் பேதப்பட்டும் பொருள் ஒன்றாதல் காண்க. இவற்றைத் துவாந்தமாக்கி முடித்தாலும் முடியுமெனிற் பொருள் வேறுபடுதல் காண்க. மேலுந் தமக்கு முன் ஆ என்னும் இடைச்சொற் பெற்றல்லது முடியா. கிறான் முதலிய பிரத்தியங்கள் நடுவே ஒரு னகாரவொற்றுப் பெற்றுக்கின்றான், கின்றாள் என முடிதலுமாம்.

வரலாறு :-

உண்கின்றான், உண்கின்றாள், உண்கின்றார், உண்கின்றார்கள், உண்கின்றது, உண்கின்றன எனவும்; உண்ணாநின்றான், உண்ணாநின்றாள், உண்ணாநின்றார், உண்ணாநின்றார்கள், உண்ணாநின்றது, உண்ணாநின்றன எனவும் வரும்.

நில், இரு, கிட என்னுந் தாதுக்களை இறந்தகாலப் படர்க்கையில் முடித்துப் பிரத்தியமாக்கிக்கொள்ள வேண்டியது.

போகாநின்றான் என்னும் பதம் நின்றானென்னும் பிரத்தியத்தான் முடியாதே துவாந்தமாக்கிப் போ என்னுந் தாதுவுக்கும், நில்லென்னுந் தாதுவுக்கும் ஒருவனைக் கருத்தாவாக்கி முடிக்கில் அது பொருந்தாது; அவன் போவென்னுந் தாதுவுக்கல்லது நில்லென்னுந் தாதுவுக்குக் கருத்தாவாய் நிற்றல் இல்லாமையினென்க. அது போல உண்ணாவிருந்தான் என்னும் பதம் உண்கை முற்பட்டு இருக்கை பிற்படாமையின், துவாந்தமாக்கி முடிக்கலாகாது. உறங்காகிடந்தான் என்னும் பதமும் உறங்குகை முற்பட்டுக் கிடக்கை பிற்படாமையின் துவாந்தம் ஆக்கல் ஆகாது. அதனால், நின்றான் முதலிய பிரத்தியம் போல இருந்தான் முதலிய ஆறும், கிடந்தான் முதலிய ஆறும் பிரத்தியமாக்கி மரபு அறிந்து முடிக்க.

(4)

75. படர்க்கை எதிர்கால வினைகளில் பிரத்தியங்கள் வருமாறு

வான்பானும் வாள்பாளும் வார்பாரும் வார்களும் பார்களுஞ்சீர்
தான்பா வியவது வும்பது வுந்தத்தை யத்தைவென்ற
தேன்பாவுஞ் சொல்லி ! வனவும் பனவுந் திகழ்படர்க்கை
வான்பான் மலியு மெதிர்விற் றொழிற்பத மாறிற்குமே.

(இ-ள்.) வான், முதல் பன ஈறான பன்னிரண்டு பிரத்தியமும் எதிர்காலப் படர்க்கைக் கிரியா பதம் ஆறிற்கும் ஒன்றற்கு இரண்டாக வரும் (எ-று.)