83

நீருண்ணும், நீருண்ணுமின் என நீர் என்னும் முன்னிலையொருமைச் சிறப்புப் பதத்தானும், முன்னிலை ஏவல் ஒருமைச் சிறப்பு வந்தது. நீர் என்னுஞ் சிறப்புப் பதம் உம், மின் என்னும் பிரத்தியங்களான் முடியும்.

நீங்கள் போமின்கள், 1நீங்கள் நில்லும், நீங்கள் போங்கள் என முன்னிலை ஏவற்பன்மை வந்தது. நீங்கள் போமின் என ஒரோவிடத்துக்கள் அழிந்து முடியும்.

அவனென் செய்க, இவளென் செய்க, செய் காத்த நீயுண்க, இவனென் செய்ய உண்டான், நீயறிக என இசைவுப் பொருளில் வந்தது.

உண்டான் போலும், உண்டானாம் எனப் பரோக்கம் வந்தது.

பரோக்கமாவது தன் முகப்பன்றியொழிவது. பிறவுமன்ன.

(9)

80. மூன்றிடத்தினும் துணிவின்கண் பிரத்தியங்கள் வருமாறு

தன்மைத் துணிவா மொருமைவன் பன்தஞ்சம் போமொடுவோம்
பன்மைக்க ணன்றிப் படர்க்கையின் கண்ணும் மொருமையிலாம்
பன்மைக்கண் வர்பர்கள் ளோடாகு முன்னிலை தன்னொருமைத்
தன்மைச் சிவைதிபன் மைக்கி விசிப்பித்திப் பின்னரவே.

(இ-ள்.) துணிவுப் பொருளின்கண் தன்மையொருமையில் வன், பன் என்னும் இரண்டு பிரத்தியமுமாம்; அப்பொருளில் தன்மைப் பன்மையை விளக்குதற்குத் தம், சம், போம், வோம் என்னும் நாலு பிரத்தியமுமாம்; படர்க்கையொருமையில் உம் என்னும் பிரத்தியம் வரும்; இதனில் உகரம் அழியவும் பெறும்; வர், பர் என்பன தனித்தும் கள்ளோடு கூடியும் படர்க்கைப் பன்மையின் கண் ஆம்; சி, வை, தி என்னும் மூன்றும் முன்னிலையொருமைப் பொருளிலாம்; கி, வி, சி, தி, பி என்னும் ஐந்தின் பின்பு ரகரவொற்றென்னும் பன்னிரண்டாம் மெய் பெற்றும், அவ்வெழுத்துக்கள் நீண்டும் முன்னிலைப் பன்மையின்கண் ஆம் (எ-று.)

வரலாறு:- அறிவன், கூறுவன், நிற்பன், உண்பன் எனவும்; லகர ஆதேசம் பெற்று அறிவல், கூறுவல் எனவும் தன்மையொருமைத் துணிவு வந்தது. நாம் கண்டம், நாங்கள் கண்டம், நாமறிசம், நாங்களறிசம், நாம் நிற்போம், நாங்கள் நிற்போம், நாம் அறிவோம், நாங்களறிவோம் எனத் தன்மைப் பன்மைத் துணிவு வந்தது.


1. 'பல்லோர் படர்க்கை முன்னிலை தன்மை, அவ்வயின் மூன்று நிகழுங் காலத்துச், செய்யு மென்னுங் கிளவியொடு கொள்ளா' என்னுந் தொல்காப்பியத்தோடு மாறுபடாதோ எனின், அற்றன்று; ஈண்டு ஏவற் பொருளாயிற்று என்க. ஏவலில் மின் ஒன்றன்றோ ஆண்டும் பிறாண்டுங் கூறியது எனின், புதியன புகுதலென்க,' என்பது பழைய குறிப்பு.