85

இகரமாக்கி உண்டியது, உறங்கியது, உண்கிறியது, உறங்குகிறியது, உண்கிறிது, உறங்குகிறிது, உண்பிது, உறங்குவிது எனவும் முடியும். இவையும் உண்ணப்பட்டது, உறங்கப்பட்டது என்றாம். இவ்வாறே அனைத்துங் கொள்க.

'அவ்வொடுபடுத் தாதுபின் னாமியற்கை தனைக்கரு மம்பெறும்' என்றதனால், அறி, காண் என்னுந் தாதுவின் பின் அகரமும், அதன் பின் படு என்னுந் தாதுவும் வைத்து அறியப்படு எனக் கருமத் தாதுவாக்கி, இத்தாதுவின் பின் முன் சொன்ன பிரத்தியங்களை வருவித்து அறியப்பட்டான், அறியப்பட்டாள், அறியப்படாநின்றான், அறியப்படாநின்றாள், அறியப்படுவான், அறியப்படுவாள் எனப் பிறவும் முடிக்க. சிறப்புப் பலர் ஒன்று பல முன்னிலை தன்மை அனைத்தும் இவ்வாறே முடியும்.

'தாதுக்கள் மற்றும் படுவினைப் போல் நினைக்க வரும்' என்றதனால், காணத் தகுவான், அறியத் தகுவான், பாடுண்பான், சொல்லுண்பான் என முடிக்க.

'இவையும் பெயர்ச்சொல் நிகர்த்திடுமே' என்றதனால், கிரியா பதங்களையும் ஒன்றிற்குப் பெயராகக் கருதின பொழுது உண்பான், உண்பானை, உண்பானால், உண்பானுக்கு, உண்பான்பக்கனின்றும், உண்பானுடைய, உண்பான்பக்கல், உண்பானே என முடியும்.

இவையெல்லாம் விகாரங்கள் வரும் இடம் அறிந்து முடிக்க, விகாரமே தலைக்கருவியாக எடுத்துக்கொண்டமையால் என்க.

(11)

82. எழுத்துப்பிழைகள் வாராமல் காக்க என்பது

ஈரெட்டு மூவைந்து மாமுடல் தேற்றவு மீற்றுவன்மை
தேரிட்டு மூன்றா முடலொடு தேற்றவுஞ் சிந்தைசெய்து
நேரிட் டுரைப்ப ரறிவொன் றிலாதவர் நீயவற்றைப்
பாரிட்ட மாகப் பெரியோர் தமதுரை பார்த்தறியே.

(இ-ள்.) பதினாறாம் உடலாயுள்ள ளகாரமும், பதினைந்தாம் உடலாயுள்ள ழகாரமுந் தம்முட்டேற்றவும், ஈற்று வன்மையாய் உள்ள றகாரமும், மூன்றாம் உடலாயுள்ள சகாரமுந் தம்முட்டேற்றவும், பிறவாற்றாலும் தமிழைப் பிழைக்க வழங்குவர் அறிவு இல்லாதார். அவற்றையெல்லாம் உலகத்தாரோடு ஒக்கத் தேர்ந்து பெரியோருரையே இலக்கியமாக அறிக (எ-று.)

வரலாறு"- நாளி, கோளி, மூளை, உளக்கு, வாளை, வளி எனவும்; விழக்கு, பழிங்கு, தழிகை, இழமை எனவும், பதினாறாம் உடலும் பதி