86

னைந்தாம் உடலுந்தம்முட்டேற்றக் கருநிலஞ் சுற்றின தேசத்துச் சிலர் வழங்குவர்.

வெச்சிலை, முச்சம், கச்சை எனவும்; உற்றியம்போது எனவும்; மற்றியம் பிற்றை வாங்கி விற்றான் எனவும்; பதினேழாம் உடலும், மூன்றாம் உடலுந் தம்முட்டேற்றக் காவிரி பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர்.

நெல்லுக்கா நின்றது, வீட்டுக்கா நின்றது என்று பாலாறு பாய்ந்த நிலத்துச் சிலர் வழங்குவர்.

மற்றும் இவனைப் பாக்க, இங்காக்க, அங்காக்க எனவும்; இப்படிக்கொற்ற, அப்படிக்கொற்ற எனவும்; சேத்து நிலம், ஆத்துக் கால் எனவும்; வாயைப் பயம், கோயி முட்டை எனவும்; உசிர், மசிர் எனவும்; பிறவாற்றானும் அறிவில்லாதார் தமிழைப் பிழைக்க வழங்குவர்.

இவையெல்லாம் உலகத்தார்க்கு ஒவ்வா என்று களைக. 'உலகமென்ப துயர்ந்தோர் மாட்டே' என்றறிக.

(12)

83. வடமொழிக்கிடப்பு, தமிழ்மொழி மரபு, காரகபதக் குற்றம்
முதலியவற்றை அறிந்து, சொற்களை வழுவின்றி முடிக்க என்பது.

மதத்திற் பொலியும் வடசொற் கிடப்புந் தமிழ்மரபும்
உதத்திற் பொலியேழைச் சொற்களின் குற்றமு மோங்குவினைப்
பதத்திற் சிதைவு மறிந்தே முடிக்கபன் னூறாயிரம்
விதத்திற் பொலியும் புகழவ லோகிதன் மெய்த்தமிழே.

(இ-ள்.) தெய்வமொழிக் கிடப்பும், தென்தமிழ் மரபும், வேண்டினவாறு பகரும் ஏழைச் சொல்லும் காரக பதக் குற்றமும் அறிந்து வழுவாமல் முடிக்க (எ-று.)

(13)

கிரியாபதப் படலம் முற்றும்.

84. இவற்றாற் சொல்லாராயப்படும் என்பது

வேற்றுமை யெட்டுந் திணையிரண்டும் பாலைந்தும்
மாற்றுதற் கொத்த வழுவேழும்--ஆறொட்டும்
ஏற்றமுக் காலமிட மூன்றோ டிரண்டிடத்தால்
தோற்ற வுரைப்பதாஞ் சொல்.

இவ்வண்ணம் எட்டு வகைப்படுத்துச் சொல்லாராய்ந்தார் தொல்காப்பியனார்.

அவற்றுள் வேற்றுமை எட்டாவன, முன்பே சொல்லப்பட்டன.