90

பாசறைமுல்லையும், உழிஞையும் எனச் சொன்ன இருபத்தைந்து நிலத்தினும் முன் சொன்ன நான்கு பொருளும் அடங்கும் எனக் கொள்க. பாடாண் பாட்டும், பொதுவியலும் முதலாயுள்ளவும் அறிந்து அடக்கிக்கொள்க (எ-று.)

(2, 3)

89. அகம், அகப்புறம், புறம், புறப்புறம் என்னுமிவை
பெறும் உரைகளின் தொகை

முல்லை குறிஞ்சி மருதத் தொடுபாலை நெய்தலைந்துஞ்
சொல்லு மகமா மதனுக் குரைதொகு சட்டகமோ(டு)
எல்லை நிகழு மிருபதொ டேழுள; ஏனையவற்(று)
ஒல்லை நிகழு முரையு மறிந்துகொள் ஒண்ணுதலே !

(இ-ள்.) முல்லை, குறிஞ்சி, மருதம், பாலை, நெய்தல் என்னும் ஐந்து நிலமும் அகப்பொருளுக்கு அடையாளம் எனக் கொள்க. இப்படியுள்ள அகப்பொருளுக்குச் சட்டகம் முதலாக இருபத்தேழுரையுள. ஒழிந்த மூன்று பொருளின்கண் நிகழுமுரையும் அறிந்துகொள்க (எ-று.)

(4)

90, 91. மேற்கூறிய உரைகளின் வகை

சட்டக மேதிணை கைகோள் நடைசுட் டிடங்கிளவி
ஒட்டிய கேள்வி மொழிவகை கோளுட் பெறுபொருளென்(று)
இட்டிகச் சொற்பொருள் எச்ச மிறைச்சி பயன்குறிப்புக்
கட்டக மெய்ப்பாடு காரணங் காலங் கருத்தியல்பே.

ஏற்றும் விளைவொ டுவம மிலக்கண மேய்ந்ததொல்லோர்
போற்றும் புடையுரை யேமொழி சேர்தன்மை யேயுமன்றி
ஆற்றும் பொருளடை வென்றா முரையல் லவற்றினுக்கு
மாற்று முரையும் வகுக்கு முரையு மதித்தறியே.

(இ-ள்.) சட்டகமும், திணையும், கைகோளும், நடையும், சுட்டும், இடனும், கிளவியும், கேள்வியும், மொழியும், கோளும், உட்பெறு பொருளும், சொற்பொருளும், எச்சமும், இறைச்சியும், பயனும், குறிப்பும், மெய்ப்பாடும், காரணமும், காலமும், கருத்தும், இயல்பும், விளைவும், உவமமும், இலக்கணமும், புடையுரையும், மொழிசேர் தன்மையும், பொருளடைவும் என்னும் இருபத்தேழும் அகப்பொருளினுக்கு உரையாம். அகப்புறப் பொருளுக்கும்,