92

1"எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்."

எனவும்,

"மற்றவை தம்முள் மயங்கினு மப்பெயர்
பெற்ற திணையின் பெயர்க்கொடை பெறுமே."

எனவும் கூறினாராகலின், அவை மயங்கினும் அறிந்து கொள்க.

கைகோளாவது, களவும், கற்பும்; கற்பாவது, 2கரணமோடியைந்து வருவது; களவாவது, 3கரணமின்றி வருவது. இப்பாட்டுக் கற்பைக்கொண்டதோ களவைக் கொண்டதோ என்று சொல்வது.

நடையாவது, ஒழுக்கம். 'இப்பாட்டு எந்நடை பற்றி வந்தது?' என்றால், இந்நிலத்தின் ஒழுக்கம் பற்றி வந்தது என்றறிவது.

அஃதாமாறு :-

குறிஞ்சி நடையியல்

"அறிந்தோ ராய்ந்த வன்புதரு வகையிற்
குறிஞ்சி நடைவகை கூறுங் காலை
அரிவைக் காகிய விறைவியை வர்க்கந்
தெரிமணிப் பூணான் தெரியச் செப்பலும்
நன்னலம் புகழ்தலு நாணின மழுங்கலும்
பொன்னவிர் பூவையைப் புணர்ப்ப துரைத்தலும்
பிரிவுநனி கருதலும் பிரிவின்மை பேசலும்
பெருமை செய்தலும் பெறற்கரி தென்றலும்
ஊழ்வினை வலித்தலு முறுதெய்வம் பேணலும்
தோழனை நினைத்தலு மகறலு மணுகலும்
இடத்தொடு புலம்பலு மேழையை வினவலும்
மடத்தகு சாயல் மாதரைக் காண்டலும்
வனம்புலம் பகற்றலு மார்வ நோக்கமுங்
குவளை யுண்கண் புதைத்துத் தலைவி யிறைஞ்சலும்
ஆற்றான் மொழிதலு மஞ்சிய னோக்கமும்
ஏற்ற வுவகையோ டினியவண் முறுவலும்
ஆங்கவன் புணர்தலு மவ்வயிற் புணர்ச்சியைப்


1. தொல், பொருள், அகத். சூ. 19.

2, 3. 'காரணம்' என்பது முன் பதிப்புப் பாடம்.