95

மேதகு கிளவியின் மீண்டெதிர் கோடலும்
சிறப்புறக் கிளத்தலும்
அம்பலு மலரு மாயின வென்றலும்
வம்பலர் தாரோய் வருந்தின னென்றலும்
குறிவழிப் படுத்தலுங் கொண்கன் தோன்றலும்
அறியக் கூறலு மருங்காப்பு மிகுதலும்
தாம்பிழைப் பின்மையுந் தலச்செல வருமையும்
வன்பழிக் கஞ்சலும் வாரலை யென்றலும்
இரவர லென்றலும் 1பகல்வர லென்றலும்
மிரவும் பகலும் வாரா லென்றலும்
அவ்விரு பொழுது மாய்ந்துவர லென்றலும்
கவ்வை யுரைத்தலுங் களவவ னுரைத்தலும்
வரைதல் வேட்கையொடு வந்தவும் பிறவும்
உரைதரு பெருமையோ டுரைத்தனர் பலரே."

பாலை நடையியல்

"நூலியல் முறைமை நுண்ணிதி னுணர்ந்தோர்
பாலை நடையது பகருங் காலை
உடன்போக் குணர்த்தலு மப்போக் குரைத்தலும்
மடவோன் தன்திற மாண்புற நோக்கலும்
கற்பியல் காட்டலுங் கையுய்த்து மொழிதலும்
வெற்பிடைப் போதலும் மெல்லியல் தளர்தலும்
தளர்ந்தோ ளோம்பலுந் தம்முபே ரென்றலும்
எதிர்ந்தோர் மொழிதலு மெதிர்கொளத் தவிர்தலும்
கண்டோ ரேத்திய கற்புடை யொழுக்கமும்
தண்தளிர் மாடந் தனக்குரை மாற்றமும்
தாங்கரும் பூசல் தன்னைய ரெழுச்சியும்
ஆங்கவள் வலித்தலு மமைந்தோர் திருத்தலும்
பதியுடன் படுத்தலும் பண்பெய்த மொழிதலும்
ஈன்றோ ளிரங்கலு மெதிர்ந்தோர் கூறலும்
அம்பலு மலரு மாதலு மயலோர்
தோன்றக் கூறிய தோமறு கற்பும்
அன்புறு செவிலி பின்செல வலித்தலும்
சென்றவள் வினவலுங் கண்டோர் தெருட்டலும்
ஒன்றிய வுள்ளமொ டுவந்தவள் மீண்டலும்
வறுஞ்சுரங் கடந்தவர் வளநாடு புகுதலும்
பிறங்குபுகழ்ப் புதல்வரைப் பெறுதலும் பெற்றோள்.


1. இது வேறு பிரதியில் உள்ளது.