எழுத்ததிகாரம்100முத்துவீரியம்

(இ-ள்.) அல்வழிக்க ணாய்தமாகத் திரியும்.

(வ-று.) அவ்கடிய = அஃகடிய, இஃகடிய, உஃகடிய.

(வி-ரை.)

‘வேற்றுமை யல்வழி ஆய்த மாகும்’ (புள்ளி - 84)

என்பது தொல்காப்பியம். (205)

இதுவுமது

365. மெல்லெழுத் தியையின் மெல்லெழுத் தாகும்.

(இ-ள்.) மெல்லெழுத்துக்கள் வந்துபுணரின் அவ்வெழுத்தாகத் திரியும்.

(வ-று.) அவ் + ஞாண் = அஞ்ஞாண், இஞ்ஞாண், உஞ்ஞாண். அம்மணி, அந்நூல்.

(வி-ரை.)

‘மெல்லெழுத் தியையின் அவ்வெழுத் தாகும்’ (புள்ளி - 85)

என்பது தொல்காப்பியம். (206)

இதுவுமது

366. இடையு முயிரும் வரினியல் பாகும்.

(இ-ள்.) இடையெழுத்தும் உயிரெழுத்தும் வந்து புணரின் இயல்பாம் என்க.

(வ-று.) அவ்யாழ், இவ்யாழ், உவ்யாழ், அவ்வடை, இவ்வாடை. (207)

தெவ்

367. தெவ்வென் மொழியே தொழிற்பெய ரற்றே
     மவ்வரின் வஃகான் மவ்வு மாகும்.1

(இ-ள்.) தெவ்வென்னுஞ்சொல் உகரச்சாரியை பெறும். மகரமெய்வரின் வகரமெய்
மகரமெய்யாகும்.

(வ-று.) தெவ்வுக்கடிது, தெம்மன்னர். (208)

1. நன் - எழுத்து - மெய்யீற் - 33.