எழுத்ததிகாரம் | 102 | முத்துவீரியம் |
(வ-று.) தாழ் + கோல் =
தாழக்கோல். (212)
தமிழ்
372. தமிழு மவற்றோ ரற்றா
கும்மே.
(இ-ள்.) தமிழென்னு
மொழியும் அக்குச் சாரியை பெறும்.
(வ-று.) தமிழ் + கூற்று =
தமிழக்கூற்று.
(வி-ரை.) தமிழ் என்பது
அக்குச் சாரியை பெறும் என்பர் தொல்காப்பியர்.
(தொல்
எழுத் - 387). அகரச் சாரியை பெறும் என்பர்
நன்னூலார். (நன் -225). இவர்
தொல்காப்பியத்தைத் தழுவியுள்ளார். (213)
குமிழ்
373. குமிழென் கிளவி
யம்மொடு சிவணும்.
(இ-ள்.)
குமிழென்னுஞ்சொல் அம்முச் சாரியை பெறும்.
(வ-று) குமிழ் + கோடு =
குமிழங்கோடு. (214)
பாழ்
374. பாழென் கிளவி
மெல்லெழுத் துறழும்.
(இ-ள்.) பாழென்னுஞ் சொல்
மெல்லெழுத் துறழ்ந்து முடியும்.
(வ-று.) பாழ் + கிணறு =
பாழ்ங்கிணறு. (215)
ஏழ்
375. ஏழென் கிளவி
யன்னொடு சிவணும்.
(இ-ள்.) ஏழென்னும்
எண்ணுப்பெயர் அன்சாரியை பெறும்.
(வ-று) ஏழ் + காயம் =
ஏழன்காயம். (216)
ஏழின்முன் அளவு, நிறை
முதலியன
376. எண்ணிறை யளவும் வரூஉங் காலை
குறுகலு முகரம் வருதலு முரிய.
|