எழுத்ததிகாரம் | 103 | முத்துவீரியம் |
(இ-ள்.) ஏழென்னு மெண்ணுப்
பெயர்க்குமுன் எண்ணுப் பெயரும், நிறைப் பெயரும்,
அளவுப் பெயரும் வரின் நெடுமுதல் குறுகலும்
உகரச்சாரியை வருதலுமாம்.
(வ-று.) ஏழ் + மூன்று =
ஏழுமூன்று, ஏழுகழஞ்சு: ஏழுகலன் என வரும். (217)
ஏழின்முன் ஆயிரம்
377. ஆயிரம் வரிற்கெடு
முகரச் சாரியை.
(இ-ள்.) ஆயிரமென்னு
மெண்ணுப்பெயர் வரின் உகரச் சாரியை கெடும்.
(வ-று.) ஏழாயிரம். (218)
கீழின்முன் வல்லினம்
378. கீழின்முன் வன்மை
விகற்பமு மாகும்.1
(இ-ள்.) கீழென்னுந்
திசைப்பெயர்முன் வருகிற வல்லெழுத்து
விகற்பமுமாகும்.
(வ-று.) கீழ் + குலம் =
கீழ்க்குலம். (219)
10. ளகர ஈறு
ளகரத்தின்முன்
வல்லினம்
379. ளகரம் டகரமாம்
வேற்றுமைப் பொருட்கே.
(இ-ள்.) வேற்றுமைக்கண், க,
ச, த, ப க்கள் வரின் ளகர மெய் டகரவொற்றாகத்
திரியும்.
(வ-று.) முள் + குறை = முட்குறை.
(220)
ளகரத்தின் முன்
மெல்லினம்
380. மெல்லெழுத் தியையின்
ணகர மாகும்.2
(இ-ள்.) மெல்லெழுத்து வந்து
புணரின் ணகாரமாகும்.
(வ-று.) முள் + மரம் =
முண்மரம். (221)
1. நன். எழுத் - மெய்யீற் -
23.
2. தொல் - எழுத் - புள்ளி -
102.
|