எழுத்ததிகாரம்105முத்துவீரியம்

(வ-று.) இருளிற் கொண்டான், இருளத்துக் கொண்டான். (226)

வள்ளும் புள்ளும்

386. வள்ளும் புள்ளு முகரமொடு சிவணும்.

(இ-ள்.) வள்ளென்னும் பெயரும், புள்ளென்னும் பெயரும் உகரச்சாரியை பெறும்.

(வ-று.) வள்ளுக்கடிது, புள்ளுக்கடிது எனவரும்.

(வி-ரை.)

‘புள்ளும் வள்ளும் தொழிற்பெய ரியல’ (புள்ளி-108)

என்பது தொல்காப்பியம். (227)

குற்றியலுகரம் வரும் இடம்

387. ஈரெழுத் தொருமொழி யிடைத்தொட ருயிர்த்தொடர்
     ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
     ஆயிரு மூன்றே யுகரங் குறுகிடன்.

(இ-ள்.) இரண்டெழுத்தொரு மொழியும், இடைத்தொடர் மொழியும், உயிர்த்தொடர்
மொழியும், ஆய்தத்தொடர் மொழியும், வன்றொடர் மொழியும், மென்றொடர் மொழியுமாகிய
ஆறுமே உகரம் தன் மாத்திரையிற் குறுகுமிடமாம்.

(வி-ரை.)

‘ஈரெழுத் தொருமொழி உயிர்த்தொடர் இடைத்தொடர்
ஆய்தத் தொடர்மொழி வன்றொடர் மென்றொடர்
ஆயிரு மூன்றே உகரம் குறுகிடன்’ (குற்றிய - 1)

என்பது தொல்காப்பியம். (228)

நெடிற்றொடர்க் குற்றியலுகரம்

1388. அவற்றுள்,
      ஈரெழுத் தொருமொழி யிடைத்தொட ராகா.

(இ-ள்.) மேற்கூறிப் போந்தவற்றுள் இரண்டுமெய்கள் தொடர்ந்த
மொழியிடைத்தொடர்க் குற்றியலுகரம் ஆகாவாம்.

1. தொல் - எழுத் - குற்றிய - 2.