| எழுத்ததிகாரம் | 112 | முத்துவீரியம் |  
  
(இ-ள்.)
வன்றொடர்மொழிக் குற்றியலுகரத்துக்குமுன்
வல்லெழுத்துவரின் மிகும். 
(வ-று.) கொக்குக்கடிது. 
(வி-ரை.) 
‘வல்லொற்றுத்
தொடர்மொழி வல்லெழுத்து மிகுமே’ (குற்றிய - 12) 
என்பது தொல்காப்பியம்.
(250) 
மென்றொடர்க்
குற்றுகரம் மிகும் இடம் 
410. சுட்டுமுத னீடிய மென்றொடர் மொழியும் 
    யாகார வினாமுதன் மென்றொடர் மொழியும் 
    அவ்விய னிலைபெறு மாயுங்
காலே. 
(இ-ள்.) சுட்டுமுதல் நீண்ட
மென்றொடர் மொழிக் குற்றியலுகரமும், யாகாரவினா 
முதலாகிய மென்றொடர்மொழிக் குற்றியலுகரமும்
மிக்குமுடியும். 
(வ-று.) ஆங்குக்
கொண்டான், ஈங்குக் கொண்டான், ஊங்குக்
கொண்டான், யாங்குக் 
கொண்டான். (251) 
மேலனவற்றுள் ஒன்றற்குச்
சிறப்பு விதி 
411. அவற்றுள், 
    யாகார வினாவியல் பாதலு
முளவே. 
(இ-ள்.) முற்கூறியவற்றுள்
யாகாரவினா முதலாகிய மென்றொடர்மொழிக்
குற்றியலுகர 
மொழி யியல்பாதலு முளவாம். 
(வ-று.) யாங்கு கொண்டான். 
(வி-ரை.) 
‘யாவினா மொழியே
இயல்பு மாகும்’ (குற்றிய - 23) 
என்பது தொல்காப்பியம்.
(252) 
மேலனவற்றிற்குச்
சிறப்புவிதி 
412. அந்நான்கு மொழியுந்
தந்நிலை திரியா. 
(இ-ள்.) மூன்றுசுட்டும்
யாவினா முதலுமாகிய நான்கு பெயரும் மெல்லொற்றாந் 
தன்மை திரிந்து வல்லொற்றாகாவாம். 
			
				
				 |