சொல்லதிகாரம் | 134 | முத்துவீரியம் |
(இ-ள்.) ஆண்மைச்
சினைப்பெயர், பெண்மைச் சினைப்பெயர், ஒருமைச்
சினைப்பெயர், பன்மைச் சினைப்பெயரெனச் சினைப்பெயர்
நான்காமென்க.
(வ-று.) முடவன் - ஆண்மைச் சினைப்பெயர்,
முடத்தின் பெண்மைச் சினைப்பெயர்,
செவியிலி - ஒருமைச் சினைப்பெயர்,
செவியிலிகள் - பன்மைச் சினைப்பெயர். (30)
இயற்பெயர்
488. ஆண்மை யியற்பெயர் பெண்மை யியற்பெயர்
ஒருமை யியற்பெயர் பன்மை யியற்பெயர்
அந்நான் காகு
மியற்பெயர் மொழியே.
(இ-ள்.) ஆண்மை
யியற்பெயர், பெண்மை யியற்பெயர், ஒருமை யியற்பெயர்,
பன்மை யியற்பெயர் என இயற்பெய
ரொரு நான்காமென்க.
(வ-று.) சாத்தன் - ஆண்மை
யியற்பெயர், சாத்தி - பெண்மை யியற்பெயர்,
கோதை -
ஒருமை யியற்பெயர், கோதைகள் - பன்மை
யியற்பெயர். (31)
சினை முதற்பெயர்
489. ஆண்மைச் சினைமுதல் பெண்மைச் சினைமுதல்
ஒருமைச் சினைமுதல் பன்மைச் சினைமுதல்
எனநான் காகுஞ் சினைமுதற்
கிளவி.
(இ-ள்.) ஆண்மைச் சினைமுதல், பெண்மைச்
சினைமுதல், ஒருமைச் சினைமுதல்,
பன்மைச் சினைமுதலெனச்
சினைமுதற்பெயர் நான்காகும்.
(வ-று.) முடக்கொற்றன் -
ஆண்மைச்சினை முதல், முடக்கொற்றி - பெண்மைச்
சினைமுதல், கொடும்புறமருதி - ஒருமைச்சினைமுதல்,
கொடும்புற மருதிகள் -
பன்மைச்சினைமுதல். (32)
முறைப் பெயர்
490. ஆண்மை முறைப்பெயர் பெண்மை முறைப்பெயர்
எனவிரு திறத்தவா முறைப்பெயர்க் கிளவி,
(இ-ள்.) ஆண்மை
முறைப்பெயர் பெண்மை முறைப் பெயர் என முறைப்பெயர்
இரண்டாகும்.
|