சொல்லதிகாரம்142முத்துவீரியம்

நான்காம் வேற்றுமை

517. குவ்வே நான்கன துருபா கும்மே.

(இ-ள்.) நான்காம் வேற்றுமை யுருபாவது குவ்வொன்றேயா மென்க. (60)

அதன் பொருள் நிலை

518. கொடைபகை சிறப்புக் காத றகுதி
    அதுவாதன் முறைபொருட் டதன்பய னிலையே.

(இ-ள்.) கொடையும், பகையும், சிறப்பும், காதலும், தகுதியும், அதுவாதலும், முறையும்,
பொருட்டும் நான்காம் வேற்றுமைப் பொருணிலையாமென்க.

(வ-று.) இரவலர்க்குப் பொன் கொடுத்தான், பாம்புக்குக் கருடன் பகை, கற்பார்க்குச்
சிறந்தன செவி நட்டார்க்குக் காதலன், அருங்கல னரசர்க்குரித்து, குண்டலத்திற்குப்பொன்,
சாத்தனுக்கு மகனிவன், கூலிக்குக் குற்றேவல்.

(வி-ரை.) மேலைய நூற்பாவும் இந்நூற்பாவும்,

‘நான்கா வதற்குரு பாகுங் குவ்வே
கொடைபகை நேர்ச்சி தகவது வாதல்
பொருட்டுமுறை யாதியின் இதற்கிதெனல் பொருளே’ (பெயர்-41)

என்னும் நன்னூற் கருத்தைத் தழுவியனவாகும். (61)

ஐந்தாம் வேற்றுமை

519. இல்லு மின்னுமைந் தாவத னுருபே.

(இ-ள்.) ஐந்தாம் வேற்றுமை யுருபாவது இல், இன் ஆம். (62)

அதன் பொருள் நிலை

520. அச்ச மாக்க மதனொடு தீர்தல்
     பற்றுவிட னீங்க லொப்பில்லை யேது
     பிறவு மதன்பொரு ணிலையா கும்மே.

(இ-ள்.) அச்சமும், ஆக்கமும், தீர்தலும், பற்றுவிடலும், நீங்கலும், ஒப்பும், எல்லையும்,
ஏதுவும், ஐந்தாம் வேற்றுமைப் பொருணிலையாம்.