சொல்லதிகாரம் | 149 | முத்துவீரியம் |
(வ-று.) புலியைப்
போற்றிவா, புலியாற் போற்றிவா. (80)
கொடையெதிர் கிளவி
538. நான்கும் ஆறுங்
கொடையெதிர்க் கொக்கும்.
(இ-ள்.) கொடையெதிர்ப்
பொருண்மைக்கு நான்காம் வேற்றுமையும் ஆறாம்
வேற்றுமையும் ஒக்கும்.
(வ-று.) நாகர்க்குப்பலி,
நாகரதுபலி எனவரும்.
(வி-ரை.) நாகர் பலி
என்பதை ‘நாகர்க்குப் பலி’ என விரித்தலே
யன்றி நாகரது பலி
என விரிப்பினும் அமையும்
என்பதாம். நாகர்க்குக் கொடுத்தலை விரும்பி
மேற்கொண்டவழித்
திரிபின்றி அஃது அவர்க்கு
உடைமையாதலின் கிழமைப் பொருட்கு
உரிய உருபால்
கூறினும்
அமையும் எனச் சேனாவரையர் விளக்கம்
காண்பர். (தொல் -
இளம் -
விளக்கவுரை - 95) (81)
அச்சப் பொருள்
539. அச்சப் பொருண்மைக்
கைந்து மிரண்டும்
எச்ச மிலவே பொருள்வயி
னான.
(இ-ள்.) அச்சப்
பொருண்மைக்கு ஐந்தாம் வேற்றுமையும் இரண்டாம்
வேற்றுமையும்
வரும்.
(வ-று.) பழியினஞ்சும்,
பழியையஞ்சும். (82)
உருபுகள் ஈற்றினும்
நிற்றல்
540. வேற்றுமை யீற்றினு
நிற்பினும் வரையார்.
(இ-ள்.) வேற்றுமைத்
தொடரிறுதிக்கண்ணும் நிற்றலை நீக்கார்.
(வ-று.) கடந்தானிலத்தை,
வந்தான்சாத்தனொடு, கொடுத்தான் சாத்தற்கு,
வலியன்
சாத்தனின், ஆடைசாத்தனது, கூகைகுன்றக்கண்.
(83)
பொருள் செல் மருங்கில்
உருபு திரிதல்
541. 1 யாத னுருபிற் கூறிற்
றாயினும்
பொருள்சென் மருங்கின்
வேற்றுமை சாரும்.
1. தொல் - சொல் - 106.
|