எழுத்ததிகாரம் | 15 | முத்துவீரியம் |
(இ-ள்.) அசைச்
சொல்லாகிய மியாவின் மகரமெய்யிலிருக்கிற
இகரமும்
தன்மாத்திரையில் குறுகும்.
(வ-று.) கேண்மியா.
(வி-ரை.) இதுவும், மேலைய
நூற்பாவும்,
‘‘யகரம்வரக் குறள்
உத்திரி யிகரமும்
அசைச்சொல் மியாவின்
இகரமும் குறிய’’ (எழுத் - 38)
என்ற நன்னூலைத் தழுவியன.
(35)
குற்றியலுகரம்
36. நெட்டெழுத் திம்பருந் தொடர்
மொழியீற்றுங்
குற்றிய லுகரம் வல்லா
றூர்ந்தே.
(இ-ள்.) ஆகு என
நெட்டெழுத்துக்கு முன்னும் எஃகு என ஆய்தம், வரகு என
உயிர்,
கொக்கு என வலி, சங்கு என மெலி, தெள்கு என இடை, ஆகிய
அறுவகைத்தொடர்
மொழியீற்றினும் வல்லினத்திலேறிய உகரம் தன்
மாத்திரையில் குறுகுமென்றுணர்க.
(வி-ரை.) தொடர்மொழி என்றது ஆய்தம்,
உயிர், வலி, மெலி, இடைத்தொடர்க்
குற்றுகரங்களைக் குறிக்கும். (36)
ஐகார ஒளகாரக் குறுக்கம்
37. மொழிமுத லிடைகடை
மூவிடத் தினும்ஐ
அஃகு முதலிடத் தௌவு
மற்றே.
(இ-ள்.) ஐகாரமொழிக்கு முதலினும்
நடுவினும் கடையினும் தன் மாத்திரையில்
குறுகும் ஒளகாரமுதலில் குறுகும்.
(வ-று.) ஐப்பசி, மடையன்,
குவளை, ஒளவை எனவரும்.
(வி-ரை.)
‘‘தற்சுட் டளவொழி
யைம்மூ வழியும்
நையு மௌவு முதலற் றாகும்’’
(எழுத்து - 40)
என்பது நன்னூல். (37)
மகரக்குறுக்கம்
38. மகரம் ணனக்கீழ்
வம்மேற் குறுகும்.
(இ-ள்.) மகரமெய், மருண்ம்
போன்ம் என ணகர னகரங்களுக்கு முன்னும், தரும்
வளவனென வகரத்துக்குப் பின்னும் தன்
மாத்திரையில் குறுகுமெனவறிக
|