சொல்லதிகாரம் | 152 | முத்துவீரியம் |
ஆறனுருபொடு நான்க னுருபு
வருதல்
547. இதன திதுவித்
தன்மைத் தென்னும்
ஆறாவ தன்பொருண் மையினு
மாகும்.
(இ-ள்.) இதனது இஃது இத்தன்மைத்து
என்னும் ஆறாவதன் பொருண்மையோடும்
வரும்.
(வ-று.) யானையது கோடுகூரிது.
யானைக்குக் கோடுகூரிது (90)
இரண்ட னுருபொடு நான்கனுருபு
வருதல்
548. ஒன்றனை யொன்றுகொள்
ளிரண்டினும் வருமே.
(இ-ள்.) ஒன்றனையொன்று கொள்ளும்
என்னும் இரண்டாவதன் பொருண்மையோடும்
வரும்.
(வ-று.) இவளைக்கொள்ளு மிவ்வணி,
இவட்குக்கொள்ளு மிவ்வணி. (91)
மூன்ற னுருபொடு நான்கனுருபு
வருதல்
549. ஒன்றினா லொன்று
தொழிற்படற் கொத்த
மூன்றா வதனொடு
முடிந்துநின் றொழுகும்.
(இ-ள்.) ஒன்றினாலொன்று தொழிற்படற்கு
ஒக்கும் என்னும் மூன்றாவதன்
பொருண்மையோடும் வரும்.
(வ-று.) அவராற்செய்யத்
தகுமக்காரியம், அவர்க்குச்செய்யத்
தகுமக்காரியம். (92)
ஐந்தனுருபொடு நான்கனுருபு
வருதல்
550. நிலம்வரைக் கிளவி
யைந்தொடு நிலையும்.
(இ-ள்.) நிலத்தை வரைந்து
கூறும் ஐந்தாவதன் பொருண்மையோடும் வரும்.
(வ - று.) கருவூரின்கிழக்கு,
கருவூர்க்குக்கிழக்கு. (93)
ஆறனுருபொடு நான்கனுருபு
வருதல்
551. முறைப்பெய ராறினு
முளைக்கு மென்ப.
(இ-ள்.) முறைப்
பொருண்மையைத் தரும் ஆறாவதன் பொருண்மையோடும்
வரும்.
|