சொல்லதிகாரம்153முத்துவீரியம்

(வ-று.) சாத்தனது மைந்தன், சாத்தனுக்கு மைந்தன். (94)

ஐந்தனுருபொடு நான்கனுருபு வருதல்

552. பண்பி னாக்கத் தைந்தொடுஞ் சிவணும்.

(இ-ள்.) பண்பினாக்கத்து ஐந்தாவதன் பொருண்மையோடும் வரும்.

(வ-று.) சாத்தனினெடியன், சாத்தற்குநெடியன் எனவரும். (95)

ஏழனுருபொடு நான்கனுருபு வருதல்

553. கால முணர்த்து மேழொடு நிலையும்.

(இ-ள்.) காலத்தின்கண் அறியப்படும் ஏழாம் வேற்றுமைப் பொருண்மையினும்
வருமென்க.

(வ-று.) காலைக்கண்வரும், காலைக்குவரும். (96)

ஐந்தனுருபொடு நான்கனுருபு வருதல்

554. பற்று விடுபெய ரைந்தொடுஞ் சிவணும்.

(இ-ள்.) பற்றுவிடு பொருண்மைப் பெயராகிய ஐந்தாம் வேற்றுமைப்
பொருண்மையோடும் வரும்.

(வ-று.) மனைவாழ்க்கையின் பற்றுவிட்டான், மனைவாழ்க்கைக்குப் பற்றுவிட்டான்.

(வி-ரை.) 547 முதல் இந்நூற்பா வரையுள்ள கருத்துக்கள்.

‘இதன திதுவிற் றென்னுங் கிளவியும்
அதனைக் கொள்ளும் பொருள்வயி னானும்
அதனாற் செயற்படற் கொத்த கிளவியும்
முறைக்கொண் டெழுந்த பெயர்ச்சொற் கிளவியும்
பால்வரை கிளவியும் பண்பி னாக்கமும்
காலத்தி னறியும் வேற்றுமைக் கிளவியும்
பற்றுவிடு கிளவியும் தீர்ந்துமொழிக் கிளவியும்
அன்ன பிறவும் நான்க னுருபில்
தொன்னெறி மரபின தோன்ற லாறே’ (வேற்றுமை மயங் - 27)

என்னும் தொல்காப்பியக் கருத்தைத் தழுவியனவாகும். (97)