| சொல்லதிகாரம் | 156 | முத்துவீரியம் |  
 (வ-று.) தோழீஇஇஇஇ. (106) 
ஐகாரம் விளியேற்குமாறு 
564. ஐகா னிறுதி முறைப்பெயர் மருங்கின் 
     ஆவொடு வருதற்கு முரிய
வாகும். 
(இ-ள்.) ஐகாரவிறுதி
முறைப்பெயர்க்கண் ஆவோடு விளியேற்று
வருதற்குரியவாம். 
(வ-று.) அன்னை, அன்னா.
உம்மையால், அன்னாய். (107) 
அண்மைக்கண்
விளியேற்குமாறு 
565. அண்மைப் பெயரியல்
பாக விளிக்கும். 
(இ-ள்.) சமீபப்பெய
ரியல்பாய் விளிக்கும். 
(வ-று.) நம்பி வாழி, வேந்து
வாழி, நங்கை வாழி, கோ வாழி. (108) 
உயர்திணைக்கண்
விளியேற்கும் புள்ளியீறுகள் 
566. உயர்திணை மருங்கின் னரலள விறுதி 
     விளிக்கு மென்மனார் மெய்யுணர்ந் தோரே. 
(இ-ள்.) உயர்திணைக்கண்
ன, ர, ல, ள க்களிறுதிப் பெயர்கள் விளியேற்குமென்க. 
(109) 
ஏனைய ஈறுகள் ஏலாவெனல் 
567. ஏனைய புள்ளிகள்
விளியே லாவே. 
(இ-ள்.) அந்நான்கு மல்லாத மெய்களை
யிறுதியாகிய பெயர்கள் விளியேலாவா 
மென்க. 
(வி-ரை.) விளியேற்பன
இவையெனவே,   ஏலாதன பிற என்பது அறியப்படும். 
அங்ஙனமாக  இந்நூற்பா வேண்டாத தொன்றெனின், அன்று,
கூறப்பட்ட புள்ளியீறு 
பிறவாற்றான்
விளிகொள்வனவும் உள என்பது உணர்த்துதற்கும்,கூறப்படாத புள்ளியும்
 
சிறுபான்மை
விளியேற்றலும் இதற்குப் பயனாகக் கொள்க. 
எ-டு: பெண்டிர், பெண்டிரோ; தம்முன்,
தம்முனா; விளங்குமணிக் கொடும்பூணாஅய் 
(புறம் - 130) என வருவனவும் இதனாற் கொள்க. (110) 
			
				
				 |