எழுத்ததிகாரம்16முத்துவீரியம்

(வி-ரை.)

‘‘ணனமுன்னும் வஃகான் மிசையும் மக்குறுகும்’’ (எழுத்து - 41)

என்பது நன்னூல். (38)

ஆய்தக்குறுக்கம்

39. லளவிறு புணர்ச்சியி னாய்த மஃகும்.

(இ-ள்.) கஃறீது முஃடீதென லகர ளகர வீற்றுப் புணர்ச்சியினாகிய ஆய்தம்
தன்மாத்திரையில் குறுகுமென்க.

(வி-ரை.)

‘‘லளவீற் றியைபினா மாய்த மஃகும்’’ (எழுத்து-42)

என்பது நன்னூல். (39)

மெய்யின்வடிவம்

40. மெய்யீ றெல்லாம் புள்ளியொடு நிலையில்
    இறுதியாகிய பதினெட்டு மெய்களு மேலே.

(இ-ள்.) இறுதி க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற், ன் என
ஒரு புள்ளியைப் பெறுமென்க. (40)

எகர ஒகரத்தின் வடிவம்

41. 1எகர ஒகரத் தியற்கையு மற்றே.

(இ-ள்.) எ, ஒ, இரண்டுயிரும் மேலே ஒரு புள்ளியைப் பெறும். (41)

குற்றியலுகரத்தின் வடிவம்

42. 2குற்றிய லுகரமு மற்றென மொழிப.

(இ-ள்.) குற்றியலுகரமும் மேலே ஒரு புள்ளியைப் பெறும்.

(வ-று.) நாகு. (42)

1. தொல் - எழுத்து - நூன்மரபு - 18.

2. ” ” புணரியல் - 3.