சொல்லதிகாரம்183முத்துவீரியம்

(இ-ள்.) இகு, மியா, இக, மதி, மோ, சில் ஆகியவாறிடைச் சொல்லும், முன்னிலை
யசைச்சொல்லாம்.

(வ - று.) ‘புலம்பனைக் கண்டிகும்’ (ஐங்-121) கேண்மியா, கண் பனியான்றிக,
கேண்மதி, கண்டது மொழிமோ, காப்பும் பூண்டிசின். (21)

ஆங்க, அம்ம

664. ஆங்க வுரையசை யம்ம கேட்பிக்கும்.

(இ-ள்.) ஆங்கவென்னும் இடைச்சொல் உரையசையும், அம்மவென்னுமிடைச்சொற்
கேட்பிக்குந் தரும்.

(வ-று.) ஆங்கக் குயிலும், ‘அம்மவாழி தோழி,’ (ஐங்குறு-31) (22)

இகும், சின்

665. இகுஞ்சினு மேனை யிடத்தொடுஞ் சிவணும்.

(இ-ள்.) இகும், சினும், படர்க்கைத் தன்மைச் சொல்லோடும் பொருந்தும்.

(வ-று.) புகழ்ந்திகுமல்லரோபெரிதே, ‘யாரஃதறிந்திசினோரே’ (குறுந் - 18) (23)

ஒப்பில் போலி

666. ஒப்பில் போலியு முரையசை யாகும்.

(இ-ள்.) ஒப்புமையுணர்த்தாத போலியு முரையசையாம்.

(வ-று.) மங்கலமென்பதோ ரூருண்டுபோலும். (24)

அசைநிலை

667. யாகா பிறபிறக் கரோபோ மாதென
     வருமொரு வேழு மசைநிலை மொழியே.

(இ-ள்.) யா, கா, பிற, பிறக்கு, அரோ, போ, மாது ஏழும் அசை நிலை மொழியாம்.

(வ-று.) யாபன்னிருவர், ‘இவட் காண்டிகா’ (கலி - 99) ‘தான் பிறவரிசை’ (புறம்-140)
அது பிறக்கு, ‘குயிலாலுமரோ’ (கலி - 33)