சொல்லதிகாரம் | 187 | முத்துவீரியம் |
(இ-ள்.) கூர்ப்பென்பதும்,
கழிவென்பதும் ஒன்றனது மிகுதலாலாகிய குறிப்பை
யுணர்த்தும்.
(வ-று.) ‘துனிகூ ரெவ்வமொடு’
(சிறுபாண்-36) ‘கழிகண்ணோட்டம்’ (பதிற்-22). (38)
அதிர்வு, விதிர்ப்பு
681. அதிர்வும்,
விதிர்ப்பு நடுக்கப் பொருள.
(இ-ள்.) அதிர்வென்பதும்,
விதிர்ப்பென்பதும், நடுக்கமாகிய குறிப்பைத்
தெரிவிக்கும்.
(வ-று.) ‘அதிர வருவதோர்
நோய்’ (குறள்-429) ‘விதிர்ப்புற வறியா
வேமக்காப்பினை’ (புறம்-20) எனவரும். (39)
தீர்தல், தீர்த்தல்
682. தீர்த றீர்த்தல்
விடற்பெயர்க் கிளவி.
(இ-ள்.) தீர்தலென்பதும், தீர்த்தலென்பதும்
ஆகிய இரண்டும், விடுதலாகிய குறிப்பைத்
தெரிவிக்குமென வறிக.
(வ-று.) ‘துணையிற்றீர்ந்த
கடுங்கண் யானை.’ (நற்-108)
(வி-ரை.) தீர்தல் தன்
வினையாகவும், தீர்த்தல் பிறவினையாகவும் வரும்
என்பர்
இளம்பூரணர். இதனைச் சேனாவரையர்
மறுப்பர். பின்னர் வந்த நச்சினார்க்கினியர்
இவரை
மறுத்து இளம்பூரணர் கருத்தே வலியுடையது
என்பர். ‘கங்கையைச் செற்ற தீங்கு தீர்த்து
நீர்
கொண்மின்’ (சிந்தாமணி - 1275) என்ற
விடத்துத் தீர்த்தல் என்பது விடற்பொருட்டாய்
வந்தது எனக் காட்டுவர் நச்சினார்க்கினியர். (40)
பெருமைப் பொருளில் வருவன
683. தடவொடு கயநளி
பெருமைப் பொருள.
(இ-ள்.) தடவும், கயவும்,
நளியும், பெருமையென்னும் பண்பைத் தெரிவிக்கும்.
(வ-று.) ‘வலிதுஞ்சு தடக்கை’
(புறம்-394) ‘கயவாய்ப் பெருங்கண்யானை’
(அகம்-148)
‘நளிமலைநாடன்’ (புறம்-150) (41)
பிணை, பேண்
684. பிணையும் பேணும்
பெட்பா கும்மே.
|