சொல்லதிகாரம் | 188 | முத்துவீரியம் |
(இ-ள்.) பிணையும், பேணும்
பெட்பின் பொருளாகிய புறந்தருதல் என்னுங் குறிப்பைத்
தெரிவிக்கும்.
(வ-று.) ‘அரும்பிணை
யகற்றி’ ‘அமரர்ப்பேணியும்’ (புறம்-99) (42)
தா
685. தாவே வலியும் வருத்த
முந்தரும்.
(இ-ள்.) தாவென்பது -
வலியும், வருத்தமுமாகிய குறிப்பை யுணர்த்தும்.
(வ-று.) ‘தாவி னன்பொன்
றைஇய பாவை’ (அகம்-212). ‘கருங்கட்டாக்கலை’
(குறுந்-69). (43)
அரவப் பொருளன
686. 1 கம்பலை சும்மை
கலியே யழுங்க
லென்றிவை நான்கு மரவப்
பொருள.
(இ-ள்.) கம்பலை, சும்மை,
கலி, அழுங்கல் நான்கு மரவமாகிய
இசைப்பொருண்மையை யுணர்த்தும்.
(வ-று.) ‘கம்பலைமூதூர்’
(புறம்-54) ஒருபெருஞ் சும்மையொடு. ‘கலிகொளாயம்’
(அகம்-11) ‘அழுங்கலூரே’ (நற்-203) எனவரும். (44)
வெகுளிப் பொருளன
687. 2 கறுப்புஞ் சிவப்பும்
வெகுளிப் பொருள.
(இ-ள்.) கறுப்பும்,
சிவப்பும், வெகுளியாகிய குறிப்பையுணர்த்தும்.
(வ-று.) ‘நிற்கறுப்பதோ
ரங்கடிமுனையள்’ ‘நீ சிவந்திறுத்த நீரழி
பாக்கம்’ (பதிற்-13).
(45)
வழுத்தற் பொருளன
688. பரவும் பழிச்சும்
வழுத்தன் மேன.
(இ-ள்.) பரவும், பழிச்சும்,
வழுத்தலாகிய குறிப்பை யுணர்த்தும்.
1. தொல் - சொல் - உரி. 53.
2. தொல் - சொல் - உரி. 76.
|