எழுத்ததிகாரம்19முத்துவீரியம்

(இ-ள்.) ரகர ழகரங்கள் மேல்வாயை நாநுனி தடவப் பிறக்கும். (53)

54. லகரமணப் பல்லடி நாவிளிம் புறவரும்.

(இ-ள்.) லகரம் மேல்வாய்ப் பல்லடியை நாவோரம் தடித்துப் பொருந்தப் பிறக்கும்.
(54)

55. ளகரமேல் வாயை நாநுனி தடவப்
    பிறக்கு மென்மனார் பெரிதுணர்ந் தோரே.

(இ-ள்.) ளகரம் மேல்வாயை நாவோரம் தடித்துத் தடவப் பிறக்கும். (55)

56. 1மேற்பல் லிதழுற மேவிடும் வவ்வே.

(இ-ள்.) வகரம் மேல்வாய்ப் பல்லைக் கீழுதடு பொருந்தப் பிறக்கும். (56)

ற, ன

57. அண்ண நுனிநா வழுத்த றனவரும்.

(இ-ள்.) றகர னகரங்கள் மேல்வாயை நாநுனி மிக வழுத்தப் பிறக்கும். (57)

ஆய்தத்திற்கு இடமும் பிறப்பும்

58. உந்தி தனிநிலை யுற்றங் காந்தெழும்.

(இ-ள்.) ஆய்தத்துக்கு உந்தி இடமாம், வாயைத் திறத்தலாற் பிறக்கும்.

(வி-ரை.) ஆய்தம் தலையினிடமாகப் பிறக்கும் என்பர் இளம்பூரணம் நன்னூலாரும்
நச்சினார்க்கினியர் நெஞ்சினிடமாகப் பிறக்கும் என்பர். இவர் உந்தியை இடமாகப் பிறக்கும்
என்று கூறுவது புதியதாம். (58)

1. நன். எழுத்து. 30.