சொல்லதிகாரம்194முத்துவீரியம்

வொருத்தி கொல்லோ வென்றானும், ஐயம் நிகழ்ந்தவழித் துணிதலுமுண்டுபிற;
நடையுள்துணிந்தவழி மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைத் தன்மை யேற்றினு மமையும்,
மகனென்று துணிந்தவழி குற்றியன்று மகனெனவும், குற்றியென்று துணிந்தவழி மகனல்லன்
குற்றியெனவும், ஆண்மகனெனத் துணிந்தவழி பெண்மக ளல்லள் ஆண்மகனெனவும்,
பெண்மகளென்று துணிந்தவழி ஆண்மக னல்லன் பெண்மக ளெனவும், ஒன்றெனத்
துணிந்தவழி பலவல்ல ஒன்றெனவும், பலவெனத் துணிந்தவழி ஒன்றன்று பலவெனவும்
மறுக்கப்படும் பொருண்மேல் அன்மைக்கிளவி அன்மைத் தன்மையைச் சுட்டி நின்றமை
காண்க. (62)

வண்ணச்சினைச்சொல்

705. பண்புஞ் சினையு முதலு முறையே
     மயங்கா தியலும் வண்ணச் சினைச்சொல்.

(இ-ள்.) பண்புச்சொல்லும், சினைச்சொல்லும், முதற்சொல்லும் ஆகிய மூன்றுங்
கூறப்பட்ட முறை மயங்காமல் வழக்கைப் பொருந்தி நடக்கும் வண்ணச் சொல்லோடு
தொடர்ந்த சினைச்சொல்லையுடைய முதற்சொல்லென வறிக.

(வ-று.) செங்கானாரை, பெருந்தலைச்சாத்தன்.

(வி-ரை.) வண்ணம்-நிறம். இது பண்புச் சொல்லாகும். வண்ணச்சினைச் சொல்
என்பதால் இம்மூன்றும் ஒருங்கு கூறப்பெறும் பொழுதே இம்முறை மயங்காது
கூறவேண்டும் என்று கருத்தாகிறது.

செங்கால் நாரை என்பதில் வண்ணம், சினை, முதல் மூன்றும் ஒருங்கு வந்து
இம்முறை மயங்காது நிற்றல் காண்க. (63)

பன்மைக் கிளவிகள்

706. ஒருவரை யுரைக்கும் பன்மைக் கிளவியும்
     ஒன்றனை யுரைக்கும் பன்மைக் கிளவியும்
     வழக்கினு ளுயர்த்தல் வழுவா காவே.

(இ-ள்.) ஒருவனையும், ஒருத்தியையுங் கூறும் பன்மைச் சொல்லும், ஒன்றனைக் கூறும்
பன்மைச் சொல்லும், வழக்கின் கண் உயர்த்திக் கூறுஞ் சொல்லாம்.

(வ-று.) நீயிர் வந்தீர், யாம் வந்தேம், இவர் வந்தார். (64)

இடம் உணர்த்தும் முதனிலைகள்

707. 1 தரல்வரல் கொடைசெலல் சாரும் படர்க்கை
       எழுவா யிரண்டு மெஞ்சிய வேற்கும்.

1. நன் - பொது - 30.