சொல்லதிகாரம்198முத்துவீரியம்

(இ-ள்.) ஒருபொருளைக் குறித்துவந்த பல பெயர்ச் சொற்கள் ஒருதொழிலே முடிபாகக்
கூறாது பெயர் தொறும் வேறாகிய தொழில்களைக் கொடுத்துரைப்பின் ஒருபொருளனவாம்.

(வ-று.) ஆசிரியன் பேரூர்க்கிழான் வந்தான். (75)

தன்மைப் பெயரும் அஃறிணைப் பெயரும்

718. உயர்திணைத் தன்மையும் அஃறிணைப் பெயரும்
     தொகைவயின் விரவி வரப்பெறு மென்ப.

(இ-ள்.) உயர்திணைத் தன்மைப்பெயர்க் கிளவியும், அஃறிணைப் பெயர்க்கிளவியும்,
எண்ணுதற்கண் விரவி வருமென்க.

(வ-று.) யானுமென் எஃகமுஞ் சாறும். (76)

ஒருமைப்பெயர்கள் வரும் மரபு

719. ஒருமையெண் ணொருமைக் கண்ணல தியலா.

(இ-ள்.) ஒருவன் ஒருத்தி யென்னும் ஒருமை யெண்ணை யுணர்த்துமொழிகள்
ஒருமைக்கணல்லது இருமை முதலாகிய எண்முறைக்கண் நில்லாவாம்.

(வ-று.) ஒருவன், ஒருத்தி எனவரும்.

(வி-ரை.)

‘ஒருவன் ஒருத்திப் பெயர்மேல் எண்ணில’ (பெயர் - 31)

என்பர் நன்னூலாரும். (77)

வியங்கோள் எண்ணுப் பெயர்

720. வியங்கோ ளொடுதொட ரெண்ணுக் கிளவி
     திணைவிர வியும்வருஞ் செப்புங் காலே.

(இ-ள்.) வியங்கோளோடு தொடரும் எண்ணுப் பெயர் திணை விரவியும் வரும்.

(வ-று.) ஆவுமாயனுஞ் செல்க. (78)

வேறு வினைப் பலபொருள்

721. வேறு வினைப்பல் பொருட்குப் பொதுப்பெயர்
     பொதுவினை கொடுத்துப் புகல்வது நெறியே.