சொல்லதிகாரம்203முத்துவீரியம்

மேலதற்குச் சிறப்பு விதி

733. உயர்திணை முடிபா தலுமுரித் தாகும்.

(இ-ள்.) காலமுதலாகியசொல் லுயர்திணை முடிபாதலும் உரித்தாம்.

(வ-று.) காலன்கொண்டான், உலகர்பசித்தார், உடம்பிழந்தான்.

(வி-ரை.) உயர்திணை முடிபாதலும் உரித்து என ஆசிரியர் பொதுவாகக்
கூறினாரேனும், இக்காலம் முதலிய சொற்கள் ஈறுதிரிந்து வாய்பாடு வேறுபட்டவிடத்தே
அங்ஙனம் உயர்திணையாகும் என்று கொள்க. என்னை? ‘இசைத்தலும் உரிய
வேறிடத் தான’ (சொல் - கிளவி - 59) என்பது தொல்காப்பியமாதலின், காலம் என்பது
காலன் என்றும், உலகம் என்பது உலகர் என்றும் திரிந்து உயர்திணை முடிவு
கொண்டமை காண்க. உடம்பு இழந்தான் என்ற காட்டுப் பொருத்தமில்லை. (91)

அடைமொழி இனம் செப்பல்

734. எடுத்த மொழியினம் இயம்பலு முரிய.

(இ-ள்.) இனமாகிய பலபொருட்க ணொன்றினை வாங்கிக் கூறிய வழி அச்சொல்
தன்பொருட் கினமாகிய பிறபொருளைக் குறிப்பால் உணர்த்தலும் உரியவாம்.

(வ-று.) அறஞ்செய்தான் துறக்கம்புகும், ‘இழிவறிந்துண்பான்க ணின்பமெய்தும்’.
(குறள்-986)

(வி-ரை.) இவை முறையே மறம் செய்தான் துறக்கம் புகான், கழிபேரிரையன் இன்பம்
எய்தான் என இனம் செப்புவனவாகும். (92)

பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி

735. கண்ணும் முலையுங் கையும் பிறவும்
     பன்மை சுட்டிய சினைநிலைக் கிளவி
     பன்மை யுரைக்குங் கடப்பா டிலவே.

(இ-ள்.) கண்முதலாகிய பிறவும் பன்மையைக் குறித்து நின்ற சினைநிலைச்சொல்
பன்மையாற் கூறப்படும் யாப்புற வுடையவல்ல, முதலொன்றாயின் ஒருமையானும் பலவாயிற்
பன்மையானுங் கூறப்படும்.

(வ-று.) கண்ணல்லள், கைந்நல்லள், முலைநல்லள்; கண்ணல்லர், கைந்நல்லர்,
முலைநல்லர்.