சொல்லதிகாரம் | 208 | முத்துவீரியம் |
அத்தன்மையன வெல்லாம் அவ்வப்பொருளியல்பான்
இத் தன்மையவென்றுரைக்கும்
குறிப்புச்சொல்லாம்.
(வ-று.) அந்நெறியீண்டு வந்துகிடந்தது;
அம்மலையிதனோடு வந்து பொருந்திற்று;
அவலவலென்கின்றன நெல்; மழை
மழையென்கின்றன பைங்கூழ்.
(வி-ரை.) அவல் அவல்
என்கின்றன நெல் - நெல் பள்ளம் (தாழ்ந்த பகுதி)
வேண்டும், பள்ளம் வேண்டும் என்று கூறுகின்றது. அவல்
பள்ளமாதல், ‘அவலா கொன்றோ
மிசையா கொன்றோ’
(புறம் - 187) என்பதனானும் அறிக. ‘வெள்ளமே யானாலும்
பள்ளமே
பயிர் செய்’ என்ற பழமொழியும் ஈண்டு
அறியத்தக்கது. (தொல் - சொல் - சேனா - விளக்க
-
422). (106)
ஒருசொல் அடுக்கிற்கு
வரையறை
749. விரைவு மூன்றிசை
நிறைநான் கடுக்கே.
(இ-ள்.)
மேற்கூறிப்போந்த (735) ஒருசொலடுக்கினுள்
விரைவுப்பொருள்பட
அடுக்குவது மூன்று வரம்பையுடைத்து,
இசை நிறையடுக்கு நான்காகிய வரம்பையுடைத்தாம்.
(வ-று.) தீத்தீத்தீ,
விரைவு; பாடுகோ பாடுகோ பாடுகோ பாடுகோ நாமகள்,
இசைநிறை.
(107)
பத்துவகை எச்சங்கள்
750. 1 பிரிநிலை வினையே
பெயரே ஒழியிசை
எதிர்மறை யும்மை எனவே
சொல்லே
குறிப்பே யிசையே யாயீ ரைந்தும்
நெறிப்படத் தோன்று
மெச்சச் சொல்லே.
(இ-ள்.)
பிரிநிலையெச்சம், வினையெச்சம், பெயரெச்சம்,
ஒழியிசையெச்சம்,
எதிர்மறையெச்சம்,
உம்மையெச்சம் என வெச்சம், சொல்லெச்சம்,
குறிப்பெச்சம்,
இசையெச்சம் ஆகிய பத்தும்
எச்சப் பொருண்மையைத் தருமொழியாம். (108)
இதுவுமது
751. தத்தமெச் சத்தொடு
சார்ந்துநின் றியலும்.
1. தொல் - சொல் - எச்ச -
34.
|