எழுத்ததிகாரம் | 21 | முத்துவீரியம் |
இதுவுமது
62. 1அ, ஆ, எ, ஒ, வ்வோ டாகு
ஞம்முதல்.
(இ-ள்.) ஞகரமெய் அ, ஆ, எ, ஒ
ஆகிய நான்குயிரோடு மொழிக்கு முதலாகும்.
(வ-று.) ஞமலி - ஞாயிறு,
ஞெகிழி - ஞொள்கிற்று, எனவரும்.
(வி-ரை.)
தொல்காப்பியர் ஞகரம் ஆ, எ, ஒ ஆகிய மூன்றுயிருடன்
மட்டுமே வரும்
என்பர். நன்னூலார் அகரத்தோடு
வருதலையும் ஏற்றனர். இவ்வாசிரியரும் இவரைத்
தழுவினர். ஞெகிழி - கொள்ளி. ஞொள்கிற்று -
இளைத்தது. (62)
இதுவுமது
63. அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள வோடு
யகர மொழிமுத லாகு மென்ப.
(இ-ள்.) அ, ஆ, உ, ஊ, ஒ, ஒள
ஆகிய வாறுயிரோடும் யகர மெய்மொழிக்கு
முதலாகும்.
(வ-று.) யவனர் - யாகம்,
யுகம் - யூகம், யோகம் - யௌவனம்.
(வி-ரை.) ‘அ ஆ உ ஊ ஒ ஒள
யம் முதல்’ (எழுத்-46) என்பது நன்னூல். இதனைத்
தழுவியே இவ்வாசிரியரும் கூறியுள்ளார்.
தொல்காப்பியர் யகரம் ஆ என்பதோடுமட்டுமே
வரும்
என்பர். யகரம் ஆகாரத்தோடு கூடிவருவனவே
தமிழ்ச்சொல்லாக வரும். ஏனைய
ஆரியச்
சிதைவாகும். ஆதலின் தொல்காப்பியர் கூறுவதே
பொருத்தம் உடையதாகும். (63)
இதுவுமது
64. உ. ஊ, ஒ, ஓ வலவொடு
வவ்வரும்.
(இ-ள்.) உ, ஊ, ஒ, ஓ ஆகிய நான்குயிருமல்லாத
வெட்டுயிரோடும், வகரமொழிக்கு
முதலாகும்.
(வ-று.) வசை - வாகை, வினை -
வீமன், வெளி - வேதம், வையகம் - வௌவால்
எனவரும்.
(64)
வேற்றுநிலை
மெய்ம்மயக்கம்
65. வேற்றுநிலை க, ச, த, ப, வல்லன மெய்பதி
னான்கு மென்மனார் நற்றமிழ் வல்லோர்.
1. நன். எழுத்து - 50.
|