பொருளதிகாரம் | 231 | முத்துவீரியம் |
மறையோர் தேஎத்து மன்ற லெட்டனுள்
துறையமை நல்யாழ்த்
துணைமையோ ரியல்பே’’ (தொல் - களவு - 1)
என்றாராகலின்.
(வி-ரை.) யாணம் - அன்பு;
கலி - பெருக்கம். தலைவன் தலைவியரின் அன்பு
பெருகுதற்குரிய விழாவினைக் கலியாணம் என்றனர். ‘கலிமகிழ்
சுற்றம்போற்றக் கலியாணம்
செய்தார்கள்’ என்ற
சேக்கிழார் வாக்கும் நினைக.
பிரமமாவது: ஒத்த கோத்திரத்தானாய்
நாற்பத்தெட்டியாண்டு பிரமசரியங்
காத்தவனுக்குப் பன்னீராட்டைப் பருவத்தாளாய்ப்
பூப்பு எய்தியவளைப் பெயர்த்து
இரண்டாம்பூப்பு எய்தாமை அணிகலன் அணிந்து தானமாகக் கொடுப்பது.
பிரசாபத்தியமாவது:
மகட்கோடற்கு உரிய கோத்திரத்தார் கொடுத்த
பரிசத்து இரட்டித்
தம்மகட்கு ஈந்து கொடுப்பது.
ஆரிடமாவது: தக்கான்
ஒருவற்கு ஆவும் ஆனேறும் பொற்கோட்டுப்
பொற்குளம்பினவாகச் செய்து அவற்றிடை நிறீஇப்
பொன் அணிந்து நீரும் இவைபோற்
பொலிந்து வாழ்வீரென நீரிற் கொடுப்பது.
தெய்வமாவது: பெருவேள்வி
வேட்பிக்கின்றார் பலருள் ஒத்த ஒருவற்கு அவ்வேள்வித்
தீ முன்னர்த் தக்கிணையாகக்
கொடுப்பது.
ஆசுரமாவது: கொல்லேறு கோடல் திரிபன்றி
யெய்தல் வில்லேற்றுதல் முதலியன
செய்துகொடல்.
இராக்கதமாவது: தலைமகள்
தன்னினுந் தமரினும் பெறாது வலிதிற் கொள்வது.
பைசாசமாவது: மூத்தோர்
களித்தோர் துயின்றோர் புணர்ச்சியும் இழிந்தோளை
மணஞ்செய்தலும் ஆடைமாறுதலும்
பிறவுமாம்.
இனிக் கந்தருவமாவது:
கந்தருவ குமாரருங் கன்னியருந் தம்முள்
எதிர்ப்பட்டுக் கண்டு
இயைந்தது போலத் தலைவனுந்
தலைவியும் எதிர்ப்பட்டுப் புணர்வது. (2)
3. தலைமகனுக்குரிய குணம்
831. 1 பெருமையு முரனு மாடூஉ
மேன.
என்பது, அறிவும் ஆற்றலும்
புகழும் கொடையும் ஆராய்தலும் பண்பும் நண்பும்
பழிபாவக் கஞ்சல் முதலியனவாய மொழி மேற்படும்
பெருமைப்பகுதியும் கடைப்பிடியும்
நிறையும்
கலங்காது துணிதலும் முதலிய வலியினது பகுதியுந் தலைவ
னிடத்ததாம். (3)
1. தொல் - பொருள் - களவி
- 7.
|