| பொருளதிகாரம் | 238 | முத்துவீரியம் |  
  
(வ-று.) 
      உணர்ந்தார்க் குணர்வரி
      யோன்றில்லைச் சிற்றம் பலத்தொருத்தன் 
      குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச்செவ்
      வாயிக் கொடியிடைதோள் 
      புணர்ந்தாற் புணருந் தொறும்பெயரும்
      போகம்பின் னும்புதிதாய் 
      மணந்தாழ் புரிகுழ லாளல்குல் போல வளர்கின்றதே.
      (திருக். 9) 
      கிளவிவேட்டல் 
      என்பது, இருவயினொத்து இன்புற்ற
      தலைமகன் உறுதல் முதலிய நான்கு புணர்ச்சியும் 
      பெற்றுச் செவிப்புணர்ச்சி பெறாமையின் ஒருசொல்
      விரும்பிவருந்தல். 
      (வ-று.) 
      அளவியை யார்க்கும் அறிவரி
      யோன்றில்லை யம்பலம்போல் 
      வளவிய வான்கொங்கை வாட்டடங் கண்ணுதல் மாமதியின் 
      பிளவியன் மின்னிடை பேரமை தோளிது பெற்றியென்றாற் 
      கிளவியை யென்னோ இனிக்கிள்ளை
      யார்வாயிற் கேட்கின்றதே. (திருக். 10) 
      (கு-ரை.) அளவியை யார்க்கும் அறிவறியான்
      - இறைவனின் குணம் ஆற்றல் 
      முதலியவற்றை அளவிட்டு
      யாரும் அறியமுடியாதவனா யிருப்பவன், துறவி துறவு 
      என்றாற்போல அளவு அளவி என்றாயிற்று, ஏனைய
      உறுப்புக்களின் நலம் இதுவானால் 
      கிளவியும் அதற்கேற்பவே
      இருக்கும் என்றவாறு. 
      நலம்புனைந்துரைத்தல் 
      என்பது, கிளவி விரும்பி
      வருந்தக்கண்ட தலைமகள் முறுவல் செய்யத்,
      தலைமகன் 
      அது பெற்றுச், சொல்லாடாமையான் உண்டாகிய
      வருத்த நீங்கி, இவள்வாய்போல் நாறும் 
      ஆம்பற்பூக்களும் உளவோவென வண்டொடு வினவல். 
      (வ-று.) 
      கூம்பலங் கைத்தலத்
      தன்பரென் பூடுரு கக்குனிக்கும் 
      பாம்பலங் காரப் பரன்றில்லை யம்பலம் பாடலரின் 
      தேம்பலஞ் சிற்றிடை யீங்கிவள்
      தீங்கனி வாய்கமழும் 
      ஆம்பலம் போதுள வோவளி காணும் அகன்பணையே. (திருக். 11) 
			
				
				 |