பொருளதிகாரம்247முத்துவீரியம்

காணப்பட்ட வடிவுக்கு இயலிவை, இடமிது என்று இயலும் இடமும் கூறல்.

(வ-று.)

விழியாற் பிணையாம் விளங்கிய லான்மயி லாமிழற்றும்
மொழியாற் கிளியாம் முதுவா னவர்தம் முடித்தொகைகள்
கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலைமுத் தம்மலைத்தேன்
கொழியாத் திகழும் பொழிற்கெழி லாமெங் குலதெய்வமே. (திருக். 29)

வற்புறுத்தல்

என்பது, இயலிடங்கூறக் கேட்டபாங்கன், நீ சொன்ன கைலையிற் சென்று
இப்பெற்றியாளைக் கண்டு இப்பொழுதே வருவன், அவ்வளவும் நீ யாற்ற வேண்டுமெனத்
தலைமகனை வற்புறுத்தல்.

(வ-று.)

குயிலைச் சிலம்படிக் கொம்பினைத் தில்லையெங் கூத்தப்பிரான்
கயிலைச் சிலம்பிற்பைம் பூம்புனங் காக்குங் கருங்கட்செவ்வாய்
மயிலைச் சிலம்பகண் டியான்போய் வருவன்வண் பூங்கொடிகள்
பயிலச் சிலம்பெதிர் கூய்ப்பண்ணை நண்ணும் பளிக்கறையே. (திருக்-30)

குறிவழிச்சேறல்

என்பது, தலைமகனை வற்புறுத்தி, அவன் குறிவழிச் செல்லாநின்ற பாங்கன்,
இத்தன்மையாளை யான் அவ்விடத்துக் காணலாங்கொல் என, அந்நினைவோடு
செல்லாநிற்றல்.

(வ-று.)

கொடுங்கால் குலவரை யேழேழ் பொழிலெழில் குன்றுமன்றும்
நடுங்கா தவனை நடுங்க நுடங்கு நடுவுடைய
விடங்கா லயிற்கண்ணி மேவுங்கொ லாந்தில்லை யீசன்வெற்பில்
தடங்கார் தருபெரு வான்பொழி னீழலந் தண்புனத்தே. (திருக்-31)

குறிவழிக்காண்டல்

என்பது, குறிவழிச் சென்றபாங்கன், தன்னை யவள் காணாமல் தானவளைக்
காண்பதோர் அணிமைக்கண் நின்று, அவன்