எழுத்ததிகாரம் | 29 | முத்துவீரியம் |
மாத்திரையின் அளவு
96. 1 இயல்பெழு மாந்த
நிமைநொடி மாத்திரை.
(இ-ள்.) மக்கள் சுபாவமாக எழுங் கண்ணிமைத்தலும்,
கைந்நொடித்தலு
மாத்திரைக்களவாம். (96)
அதன் வேறு பெயர்கள்
97. மட்டள வொடுமிதம்
வரைமாத் திரையே.
(இ-ள்.) மட்டெனினும், அளவெனினும்,
மிதமெனினும், வரையெனினும்,
மாத்திரையென்னும் ஒருபொருட் கிளவி. (97)
மாத்திரையின் நாற்கூறு
98. உன்னல் காலே யூன்ற
லரையே
முறுக்கன் முக்கால்
விடுத்த லொன்றே.
(இ-ள்.) உன்னல்
கால்மாத்திரை, ஊன்றல் அரை மாத்திரை, முறுக்கல்
முக்கால்
மாத்திரை, விடுத்தல் ஒரு மாத்திரையாம்.
(98)
குறில், நெடில்களுக்குரிய
மாத்திரை
99. ஒன்றே குறினெடி
லிரண்டள பாகும்.
(இ-ள்.) குற்றெழுத்துக்கு ஒரு
மாத்திரை, நெட்டெழுத்துக்கு இரண்டு
மாத்திரையாம்.
(வ-று.) அ, ஆ. (99)
ஒரு மாத்திரை பெறும்
எழுத்துக்கள்
100. ஐ, ஒளக் குறுக்கமொற்
றளபெடை யொன்றே.
(இ-ள்.) ஐகாரக்
குறுக்கத்துக்கும், ஒளகாரக் குறுக்கத்துக்கும், ஒற்றளபெடைக்கும்
தனித்தனி ஒரு மாத்திரையாம்.
(வ-று.) ஐப்பசி, ஒளவை,
சங்ங்கு. (100)
அரை மாத்திரை பெறும்
எழுத்துக்கள்
101. அஃகிய இ, உ,
வாய்தமெய் யரையே.
1. நன் - எழுத்து - 45.
|