பொருளதிகாரம் | 292 | முத்துவீரியம் |
வருந்தா நின்றீர், இவ்வாறு நும்
முள்ளம் மாறுபட நிகழ்தலின், இருவர்க்குமிடையே
யான் வருந்தா நின்றேனெனத், தலைமகனுக்கு வருத்தங்
கூறி வரைவுகடாதல்.
(வ-று.)
மன்னுந் திருவருந்
தும்வரை யாவிடின் நீர்வரைவென்
றுன்னு மதற்குத் தளர்ந்தொளி வாடுதிர் உம்பரெலாம்
பன்னும் புகழ்ப்பர மன்பரஞ் சோதிசிற் றம்பலத்தான்
பொன்னங் கழல்வழுத் தார்புல னென்னப்
புலம்புவனே. (திருக். 131)
தாயச்சங்கூறி வரைவுகடாதல்
என்பது, வருத்தங்கூறி வரைவுகடாய
தோழி, எம்முடையவன்னை அவள்
முலைமுதிர்வுகண்டு, இவள் சிற்றிடைக்கொரு பற்றுக்
கண்டிலேமென் றஞ்சா நின்றாள், இனி
மகட் பேசுவார்க்கு மறாது
கொடுக்கவுங் கூடுமெனத், தாயச்சங்கூறி வரைவுகடாதல்.
(வ-று.)
பனித்துண்டஞ் சூடும் படர்சடை யம்பல
வன்னுலகம்
தனித்துண் டவன்றொழுந் தாளோன்
கயிலைப் பயில்சிலம்பா
கனித்தொண்டை வாய்ச்சி கதிர்முலைப்
பாரிப்புக் கண்டழிவுற்
றினிக்கண் டிலம்பற்றுச் சிற்றிடைக்
கென்றஞ்சும் எம்மனையே. (திருக். 132)
இற்செறிவறிவித்து வரைவுகடாதல்
என்பது, தாய் அச்சங்கூறி
வரைவுகடாய தோழி, எம்மன்னை அவளை யுற்றுநோக்கித்
திருமலைக்கட் புறம்போய் விளையாட வேண்டாவெனக்
கூறினாள், இனி யிற்செறிப்பாள்
போலுமென, இற்செறிவறிவித்து வரைவுகடாதல்.
(வ-று.)
ஈவிளையாட நறவிளை
வோர்ந்தெமர் மால்பியற்றும்
வேய்விளை யாடும்வெற் பாவுற்று நோக்கியேம் மெல்லியலைப்
போய்விளை யாடலென் றாளன்னை அம்பலத் தான்புரத்தில்
தீவிளை யாடநின் றேவிளை யாடி திருமலைக்கே. (திருக். 133)
தமர்நினைவுரைத்து வரைவுகடாதல்
என்பது, இற்செறிவறிவித்து
வரைவுகடாய தோழி, அவண்முலை தாங்கமாட்டாது
இடைவருந்துவதனைக் கண்டு, எமரிற்
|