பொருளதிகாரம்294முத்துவீரியம்

கூறுவதென்னோ வெனத், தான் முன்னிலைப் புறமொழியாக அயலுரை யுரைத்து
வரைவுகடாவா நிற்றல்.

(வ-று.)

உருப்பனை யன்னகைக் குன்றொன் றுரித்துர வூரெரித்த
நெருப்பனை அம்பலத் தாதியை உம்பர்சென் றேத்திநிற்குந்
திருப்பனை யூரனை யாளைப்பொன் நாளைப் புனைதல்செப்பிப்
பொருப்பனை முன்னின்றென் னோவினை யேன்யான் புகல்வதுவே. 

(திருக். 137)

தினைமுதிர்வுரைத்து வரைவுகடாதல்

என்பது, அயலுரையுரைத்து வரைவுகடாய தோழி, இவ்வேங்கை தினைப்புனங்
கொய்கவென்று சோதிடஞ் சொல்லலைப் பொருந்தி, எம்மைக் கெடுவித்தது, இனி 
நமக் கேனல் விளையாட்டில்லை யெனச், சிறைப்புறமாகத் தலைமகளோடு கூறுவாள்
போன்று தினை முதிர்வுரைத்து வரைவுகடாதல்.

(வ-று.)

மாதிடங் கொண்டம் பலத்துநின் றோன்வட வான்கயிலைப்
போதிடங் கொண்டபொன் வேங்கை தினைப்புனங் கொய்கவென்று
தாதிடங் கொண்டுபொன் வீசித்தன் கள்வாய் சொரியநின்று
சோதிடங் கொண்டிதெம் மைக்கெடு வித்தது தூமொழியே. (திருக். 138)

பகல்வரல்விலக்கி வரைவுகடாதல்

என்பது, சிறைப்புறமாகத் தினைமுதிர்வுரைத்து வரைவுகடாய தோழி, எதிர்ப்பட்டு
நின்று, இப்பெருங்கணியார் நமக்கு நோவுதகப் பருவஞ் சொல்லுவாராயிருந்தார்,
எம்மையன்மாரிவர் சொற்கேட்டுத் தினையைத் தடிவாராயிருந்தார், எமக்கு மினித் தினைப்
புனங் காவலில்லை, நீரினிப் பகல்வரல் வேண்டாவெனப், பகல்வரல் விலக்கி
வரைவுகடாதல்.

(வ-று.)

வடிவார் வயற்றில்லை யோன்மல யத்துநின் றும்வருதேன்
கடிவார் களிவண்டு நின்றலர் தூற்றப் பெருங்கணியார்
நொடிவார் நமக்கினி நோதக யானுமக் கென்னுரைக்கேன்
கடிவார் தினையெமர் காவேம் பெருமவித் தண்புனமே. (திருக். 139)