| பொருளதிகாரம் | 296 | முத்துவீரியம் |  
  
செழுவார் கழற்றில்லைச் சிற்றம்
      பலவரைச் சென்றுநின்று 
      தொழுவார் வினைநிற்கி லேநிற்ப தாவதித் தொல்புனத்தே.
      (திருக். 142) 
      (கு-ரை) அம்பலவரைச் சென்று தொழுவாரிடத்து
      வினை நிற்கில், ஈண்டும் தினை 
      நிற்கும் என்றது
      அவரிடத்தும் வினை நில்லா: இவ்விடத்தும் தினை
      நில்லா என்னும் 
      கருத்துப் புலப்பட நின்றது. 
      கொய்தமைகூறி வரைவுகடாதல் 
      என்பது, இரக்கமுற்று வரைவுகடாய
      தோழி, எதிர்ப்பட்டு நின்று, இப்புனத்துத் 
      தினையுள்ளதின்று தொடர்பறக் கொய்தற்றது,
      எமக்கும் இனிப்புனங்காவலில்லை, 
      யாமுமக்கறிவுரைக் கின்றே மல்லேம், நீரே யறிவீரெனத்
      தினைகொய்தமை கூறி 
      வரைவுகடாதல். 
      (வ-று.) 
      பொருப்பர்க்கி
      யாமொன்று மாட்டேம்
      புகலப் புகலெமக்காம் 
      விருப்பாக் கியாவர்க்கும் மேலர்க்கு
      மேல்வரும் ஊரெரித்த 
      நெருப்பர்க்கு நீடம் பலவருக் கன்பர் குலநிலத்துக் 
      கருப்பற்று விட்டெனக் கொய்தற்ற
      தின்றிக் கடிப்புனமே. (திருக். 143) 
      பிரிவருமைகூறி வரைவுகடாதல் 
      என்பது, கொய்தமை கூறி வரைவுகடாய தோழி,
      இப்புனத்துப் பயின்ற கிளிகள் 
      தமக்குத்
      துப்பாகாதகாலத்தும் தினைத்தாளை விடாதிரா நின்றன,
      நாம் போனால் நங்காதலர் 
      இவ்விடத்தே வந்து
      நம்மைத் தேடுவாரோ வெனச், சிறைப்புறமாகப்
      பிரிவருமை கூறி 
      வரைவுகடாதல். 
      (வ-று.) 
      பரிவுசெய் தாண்டம்
      பலத்துப் பயில்வோன் பரங்குன்றின்வாய் 
      அருவிசெய் தாழ்புனத் தைவனங்
      கொய்யவும் இவ்வனத்தே 
      பிரிவுசெய் தாலரி தேகொள்க பேயொடும் என்னும்பெற்றி 
      இருவிசெய் தாளின் இருந்தின்று காட்டும் இளங்கிளியே.
      (திருக். 144) 
      (கு-ரை.) பேயொடு செய்தால்
      பிரிவு அரிது எனக் கூட்டுக. ‘பேயோடாயினும் 
      பிரிவின்னாதே’ என்னும் வழக்கையுட் கொண்டது.
      ‘பேயோடேனும் பிரிவொன்று இன்னா 
      தென்பர்
      பிறரெல்லாம்’ என்பது ஏழாம் திருமுறை. 
			
				
				 |