| பொருளதிகாரம் | 297 | முத்துவீரியம் |  
  
மயிலொடுகூறி வரைவுகடாதல் 
      என்பது, பிரிவருமை கூறி வரைவுகடாய
      தோழி, பிரிவாற்றாமையோடு தலைமகளையுங் 
      கொண்டு புனங்காவலேறிப் போகாநின்றாள், கணியார்
      நினைவின்று முடிந்தது, யாங்கள் 
      போகின்றோம், இப்புனத்தொருவர் வந்தா
      லிங்குநின்றும் போனவர்கள், துணியாதன துணிந்து 
      போனாரென்று, அவர்க்குரைமின் என, மயிலொடு கூறி
      வரைவுகடாதல். 
      (வ-று.) 
      கணியார் கருத்தின்று முற்றிற்
      றியாஞ்சென்றும் கார்ப்புனமே. 
      மணியார் பொழில்காள் மறத்திர்கண்
      டீர்மன்னும் அம்பலத்தோன் 
      அணியார் கயிலை மயில்காள் அயில்வேல் ஒருவர்வந்தால் 
      துணியா தனதுணிந் தாரென்னும் நீர்மைகள்
      சொல்லுமினே. (திருக். 145) 
      வறும்புனங்கண்டு வருந்தல் 
      என்பது, தலைமகளுந் தோழியும்
      புனங்காவலேறிப் போகத், தலைமகன் 
      புனத்திடைச்சென்று நின்று, இப்புனம் யாமுன் பயின்றதன்றோ,
      இஃதிருக்கின்றவா 
      றென்னோவென்று, அதன் பொலிவழிவு கூறித்
      தலைமகளைத் தேடி வருந்தல். 
      (வ-று.) 
      பொதுவினிற் றீர்த்தென்னை யாண்டோன்
      புலியூ ரரன்பொருப்பே 
      இதுவெனில் என்னின் றிருக்கின்ற வாறெம் இரும்பொழிலே 
      எதுநுமக் கெய்திய தென்னுற் றனிரறை யீண்டருவி 
      மதுவினிற் கைப்புவைத் தாலொத்த வாமற்றிவ் வான்புனமே.
      (திருக். 146) 
      பதிநோக்கி வருந்தல் 
      என்பது, வறும் புனத்திடை
      வருந்திய தலைமகன், இவ்வாறு அணித்தாயினும், நம்மாற் 
      செய்யலாவ தொன்றில்லை யென்று, அவளிருந்த பதியை
      நோக்கித் தன்னெஞ்சோ டுசாவி 
      வருந்தல். 
      (வ-று.) 
      ஆனந்த மாக்கடல்
      ஆடுசிற் றம்பலம் அன்னபொன்னின் 
      றேனுந்து மாமலைச் சீறூ ரிதுசெய்ய லாவதில்லை 
      வானுந்து மாமதி வேண்டி யழுமழப்
      போலுமன்னோ 
      நானுந் தளர்ந்தனன் நீயுந் தளர்ந்தனை நன்னெஞ்சமே.
      (திருக். 147) 
			
				
				 |