எழுத்ததிகாரம் | 30 | முத்துவீரியம் |
(இ-ள்.)
குற்றியலிகரத்துக்கும், குற்றிய லுகரத்துக்கும்,
ஆய்தத்துக்கும், மெய்க்கும்,
தனித்தனி
யரைமாத்திரையாம்.
(வ-று.) நரகியாது, நாகு, ஃ,
க். (101)
கால் மாத்திரை பெறும்
எழுத்துக்கள்
102. அஃகிய மகரமு
மாய்தமுங் காலே.
(இ-ள்.)
மகரக்குறுக்கத்துக்கும், ஆய்தக்குறுக்கத்துக்கும்
தனித்தனி மாத்திரை காலாம்.
(வ-று.) போன்ம், கஃறீது.
(வி-ரை.)
‘‘மூன்றுயி ரளபுஇரண்
டாம்நெடில் ஒன்றே
குறிலோடு ஐஒளக் குறுக்கம் ஒற்றளபு
அரைஒற்று இஉக் குறுக்கம் ஆய்தம்
கால்குறள் மஃகான்
ஆய்தம் மாத்திரை’’ (எழுத் - 44)
என்ற நன்னூலார் கருத்தை
99 முதல் இந்நூற்பா வரையிலுள்ள நூற்பாக்களில் காணலாம்.
(102)
ஓரெழுத்து மூன்று மாத்திரை
பெறாது
103. ஓரெழுத் தொருமூன்
றொலிப்ப தின்றே.
(இ-ள்.) ஓரெழுத்து மூன்று
மாத்திரை யாகாவாம்.
(வி-ரை.)
‘‘மூவள பிசைத்தல்
ஓரெழுத் தின்றே’’ (நூன்-5)
என்பது தொல்காப்பியம்.
(103)
உயிரள பெடைக்குரிய
மாத்திரை
104. அளபெடை மூன்றன்மே
லாமென மொழிப.
(இ-ள்.) உயிரளபெடை மூன்று
மாத்திரையே யன்றி நான்கு மாத்திரையுமாகும்.
(வ-று.) ஓ ஒதல், பதா அ அகை.
(104)
மாத்திரை அளபிறந்து
ஒலிக்கும் இடம்
105. விற்கை புலம்பிசை
விளியினு மிகுமே.
|