பொருளதிகாரம்304முத்துவீரியம்

வரவுணர்ந் துரைத்தல்

என்பது, தலைமகனுக்குக் குறைநயப்புக் கூறிய தோழி, யாம் விளையாடிய
பொழிலிடத்து வேங்கை மேலுண்டாகிய மயிலின மின்புற்றுத் துயில்பெயரா நின்றன, இதற்குக்
காரண மென்னோ வென, அவன் வரவறிந்து கூறல்.

(வ-று.)

முன்னு மொருவ ரிரும்பொழின் மூன்றற்கு முற்றுமிற்றாற்
பின்னு மொருவர்சிற் றம்பலத் தார்தரும் பேரருள்போல்
துன்னுமொ ரின்பமென் றோகைதந் தோகைக்குச் சொல்லுவபோல்
மன்னு மரவத்த வாய்த்துயில் பேரு மயிலினமே. (திருக். 160)

(கு-ரை.) உலகம் தோன்றுதற்கு முன்னும், கழிந்த பின்னும் ஒருவராக இருக்கும்
பெருமான் எனவே ‘ஈறிலாதவன் ஈசன் ஒருவனே’ என்னும் கருத்துப் பெறப்பட்டது.

தாய் துயிலறிதல்

என்பது, தலைமகன் வரவுணர்ந்து, தலைவியைக் கொண்டு செல்லக் கருதிய தோழி,
யாம்விளையாடிய பொழிலிடத்தோர் யானை நின்றூசலைத் தள்ளியது, அதற்கியாஞ்
செய்வதென்னோவெனத்தாய் துயிலறிதல்.

(வ-று.)

கூடா ரரணெரி கூடக் கொடுஞ்சிலை கொண்டவண்டன்
சேடார் மதின்மல்லற் றில்லையன் னாய்சிறு கட்பெருவெண்
கோடார் கரிகுரு மாமணி யூசலைக் கோப்பழித்துத்
தோடார் மதுமலர் நாகத்தை நூக்குநஞ் சூழ்பொழிற்கே. (திருக். 161)

துயிலெடுத்துச் சேறல்

என்பது, தாய் துயிலறிந்த தோழி, குவளைப் பூக்கண் மலர்கின்றன. அவை நின்
கண்ணை யொக்குமாயிற் காண்பாயெனத் துயிலெடுத்துச் சேறல்.

(வ-று.)

விண்ணுக்கு மேல்வியன் பாதலக் கீழ்விரி நீருடுத்த
மண்ணுக்கு நாப்ப ணயந்துதென் றில்லைநின் றோன்மிடற்றின்