பொருளதிகாரம் | 328 | முத்துவீரியம் |
(வ-று.)
முன்னோன் அருண்முன்னும் முன்னா
வினையின் முனகர்துன்னும்
இன்னாக் கடறிதிப் போழ்தே
கடந்தின்று காண்டுஞ்சென்று
பொன்னார் அணிமணி மாளிகைத்
தென்புலி யூர்ப்புகழ்வார்
தென்னா எனவுடை யானட மாடுசிற்
றம்பலமே. (திருக். 217)
(கு-ரை.) முன்னும் உன்னா -
முற்பிறவியின் கண்ணும் நினையாத, வினையின்
முனகர் - தீவினையையுடைய இழிந்தார்.
நெறிவிலக்கிக் கூறல்
என்பது, அயர் வகற்றிக்கொண்டு
போகின்ற தலைமகனை, இனிச் செல்லு நெறிக்கண்,
நன்மக்களில்லை, நீதனியை, இவள் வாடினாள்,
பொழுதுஞ் சென்றது, ஈண்டுத் தங்கிப்
போவாயாகவென, அவ்விடத்துள்ளோர்
வழிவிலக்கிக் கூறல்.
(வ-று.)
விடலையுற் றாரில்லை வெம்முனை
வேடர் தமியைமென்பூ
மடலையுற் றார்குழல் வாடினள்
மன்னுசிற் றம்பலவர்க்
கடலையுற் றாரின் எறிப்பொழிந்
தாங்கருக் கன்சுருக்கிக்
கடலையுற் றான்கடப் பாரில்லை
யின்றிக் கடுஞ்சுரமே. (திருக். 218)
(கு-ரை.) விடலை - விளி. உற்றார்
- நன்மக்கள். அடலையுற்றார் - ஆட்படுந்
தன்மையர்.
கண்டவர் மகிழ்தல்
என்பது, நெறிவிலக்குற்று
வழிவருத்தந் தீர்ந்து, ஒருவரை யொருவர்
காணலுற் றின்புற்றுச் செல்லாநின்ற
விருவரையுங் கண்டு, இவர்கள்
செயலிருந்தவாற்றா னிப்பெருஞ்சுரஞ் செல்வதன்று போலும், அது
கிடக்க, இது
தானின்புறவுடைத்தாகிய தோர் நாடகச் சுவையுடைத்தா யிருந்ததென,
எதிர்வருவாரின்புற்று
மகிழ்ந்து கூறாநிற்றல்.
(வ-று.)
அன்பணைத் தஞ்சொல்லி
பின்செல்லும் ஆடவன் நீடவன்றன்
பின்பணைத் தோளி வருமிப்
பெருஞ்சுரஞ் செல்வதன்று
பொன்பணைத் தன்ன இறையுறை
தில்லைப் பொலிமலர்மேல்
நன்பணைத் தண்ணற வுண்ணளி
போன்றொளிர் நாடகமே. (திருக். 219)
|