பொருளதிகாரம் | 330 | முத்துவீரியம் |
மன்போல் பிறையணி மாளிகை சூலத்த
வாய்மடவாய்
நின்போல் நடையன்னம் துன்னிமுன்
றோன்றுநன் னீணகரே. (திருக். 222)
பதிபரி சுரைத்தல்
என்பது, நகர்காட்டிக்கொண்டு
சென்று, அந்நகரிடைப்புக்கு, அவ்விடத்துள்ள
குன்றுகள், வாவிகள், பொழில்கள், மாளிகைகள்,
தெய்வப்பதி இவையெல்லாந் தனித்தனி
காட்டி,
இது காண் நம்பதியாவதெனத், தலைமகளுக்குத்
தலைமகன் பதிபரி சுரைத்தல்.
(வ-று.)
செய்குன் றுவையிவை சீர்மலர் வாவி
விசும்பியங்கி
நைகின்ற திங்களெய்ப் பாறும்
பொழிலவை ஞாங்கரெங்கும்
பொய்குன்ற வேதிய ரோதிடம்
உந்திடம் இந்திடமும்
எய்குன்ற வார்சிலை யம்பல
வற்கிடம் ஏந்திழையே. (திருக். 223)
செவிலி தேடல்
என்பது, இருவரையும் வழிப்படுத்தி
வந்து பிரிவாற்றாது கவலாநின்ற தோழியை,
எம்பிள்ளை யெங்குற்றது, நீ கவலா நின்றாய்,
இதற்குக் காரண மென்னோவென்று
வினாவிச்,
செவிலி தலைமகளைத் தேடல்.
(வ-று.)
மயிலெனப் பேர்ந்திள வல்லியின்
ஒல்கிமென் மான்விழித்துக்
குயிலெனப் பேசுமெங் குட்டனெங்
குற்றதென் நெஞ்சகத்தே
பயிலெனப் பேர்ந்தறி யாதவன்
றில்லைப்பல் பூங்குழலாய்
அயிலெனப் பேருங்கண் ணாயென்கொ
லாமின் றயர்கின்றதே. (திருக். 224)
(கு-ரை.) குட்டன் - பிள்ளை;
ஈண்டுப் பெண் மகவைக் குறித்து நின்றது.
அறத்தொடு நிற்றல்
என்பது, தேடிய செவிலிக்கு, நீ
போய் விளையாடச் சொல்ல, யாங்கள் போய்த்
தெய்வக்குன்றிடத்தே யெல்லாரு மொருங்கு
விளையாடா நின்றேமாக, அவ்விடத்தொரு
பெரியோன், வழியே தார் சூடிப்போயினான்,
அதனைக் கண்டு, நின்மகள் அத்தாரை
|