| பொருளதிகாரம் | 332 | முத்துவீரியம் |  
  
தெறுவலக் காலனைச் செற்றவன்
      சிற்றம் பலஞ்சிந்தியார் 
      உறுவலக் கானகந் தான்படர் வானாம்
      ஒளியிழையே. (திருக். 227) 
      அடிநினைந்திரங்கல் 
      என்பது, நிலைமை நினைந்து
      கவலாநின்ற செவிலி, நுண்ணிய வடிகள் 
      பரலையுடைய
      காட்டின்கட் பாவியவாறென்னோவென, அவள் அடி
      நினைந்திரங்கல். 
      (வ-று.) 
      தாமே தமக்கொப்பு மற்றில்
      லவர்தில்லைத் தண்ணனிச்சப் 
      பூமேல் மிதிக்கிற் பதைத்தடி
      பொங்குநங் காயெரியுந் 
      தீமே லயில்போற் செறிபரற்
      கானிற் சிலம்படிபாய் 
      ஆமே நடக்க அருவினை யேன்பெற்ற
      அம்மனைக்கே. (திருக். 228) 
      நற்றாய்க்குரைத்தல் 
      என்பது, அடிநினைந்திரங்கிய
      செவிலி, கற்புமுதிர்வு தோன்ற நின்று, நின்னை, 
      இடைவிடாமல் தேடியழாநின்ற பேதையறிவு, இன்று
      என்னைத் தேய்வியா நின்ற தென்று, 
      அவளுடன்
      போனமை ஆற்றாது நற்றாய்க்கு உரைத்தல். 
      (வ-று.) 
      தழுவின கையிறை சோரின் தமியமென்
      றேதளர்வுற் 
      றழுவினை செய்யுநை யாவஞ்சொற்
      பேதை யறிவுவிண்ணோர் 
      குழுவினை யுய்யநஞ் சுண்டம் பலத்துக்
      குனிக்கும்பிரான் 
      செழுவின தாள்பணி யார்பிணி
      யாலுற்றுத் தேய்வித்ததே. (திருக். 229) 
      நற்றாய் வருந்தல் 
      என்பது, உடன் போனமை கேட்டு
      உண்மகிழ்வோடு நின்று, ஓரேதிலன் பின்னே 
      தன்றோழியை விட்டு, என்னையு முன்னே துறந்து,
      சேராதார்முன்னே ஊர் அலர்தூற்ற 
      அருஞ்சுரம்
      போயினாள், இனியான் எங்ஙன மாற்றுவேனென,
      நற்றாய் பிரிவாற்றாது 
      வருந்தல். 
      (வ-று.) 
      யாழியன் மென்மொழி வன்மனப்
      பேதையொர் ஏதிலன்பின் 
      தோழியை நீத்தென்னை முன்னே
      துறந்துதுன் னார்கண்முன்னே 
			
				
				 |