| பொருளதிகாரம் | 344 | முத்துவீரியம் |  
  
யாமையை
      நினைந்தாற்றாளாயினாளென, மந்திமேல்
      வைத்துத் தலைமகள் வருத்தங்கூறி 
      வரைவுகடாதல். 
      (வ-று.) 
      வான்றோய் பொழிலெழில்
      மாங்கனி மந்தியின் வாய்க்கடுவன் 
      தேன்றோய்த் தருத்தி மகிழ்வகண்
      டாடிரு நீண்முடிமேல் 
      மீன்றோய் புனற்பெண்ணை வைத்துடை
      யாளையும் மேனிவைத்தான் 
      வான்றோய் மதிற்றில்லை மாநகர்
      போலும் வரிவளையே. (திருக். 257) 
      காவல்மேல் வைத்துக் கண்டுயிலாமை
      கூறல் 
      என்பது, மந்திமேல்வைத்து வரைவு
      கடாவப்பட்ட தலைமகன், இது 
      நங்காதலியிடத்து
      நமக்கரிதாயிற்றெனத் தானுமாற்றானாய்
      இரவுக்குறிச் சென்று நிற்ப, 
      அந்நிலைமைக்கண்,
      இவ்விடத்துள்ளார் இவள் காவற் பறைகேட்குந்
      தோறுங் 
      கண்டுயிலாமைக்குக் காரணமென்னோ
      வெனத் தம்முட்கூறல். 
      (வ-று.) 
      நறைக்கண் மலிகொன்றை யோனின்று
      நாடக மாடுதில்லைச் 
      சிறைக்கண் மலிபுனற் சீர்நகர்
      காக்குஞ்செவ் வேலிளைஞர் 
      பறைக்கண் படும்படுந் தோறும்
      படாமுலைப் பைந்தொடியாள் 
      கறைக்கண் மலிகதிர் வேற்கண்
      படாது கலங்கினவே. (திருக். 258) 
      பகலுடம்பட்டாள்போன் றிரவரவு
      விலக்கல் 
      என்பது, சிறைப்புறமாகக்
      கண்துயிலாமை கேட்ட தலைமகன், ஆதரவுமிகவா 
      லெதிர்ப்படலுற்று நிற்பத், தோழி
      யெதிர்ப்பட்டு, நீ வந்தொழுகாநின்ற
      இப்புலராவிரவும் 
      பொழியா மழையும்
      புண்ணின்கண் நுழையும் வேல் மலராம்படி யெங்களை 
      வருத்தாநின்றன, இதற்கொரு மருந்தில்லையோ
      நும் வரையிடத் தெனப், 
      பகலுடம்பட்டாள்போன்
      றிரவரவு விலக்கல். 
      (வ-று.) 
      கலரா யினர்நினை யாத்தில்லை
      யம்பலத் தான்கழற்கன் 
      பிலரா யினர்வினை போலிருள்
      தூங்கி முழங்கிமின்னிப் 
      புலரா இரவும் பொழியா மழையும்புண்
      ணின்னுழைவேல் 
      மலரா வருமருந் தும்மில்லை யோநும்
      வரையிடத்தே. (திருக். 259) 
			
				
				 |