| பொருளதிகாரம் | 358 | முத்துவீரியம் |  
  
 யான்தோழியோ தோழியோ வென்று
      நின்னை விளித்தேன், அது கண்டிரங்கி, அவன் 
      அருளொடு வந்து தன்கையைத் தந்தான், யானும்
      மயக்கத்தாலே அதனை நின் கையென்று 
      தொட்டேன், அவனும் பிறிதொன்றுஞ்
      சிந்தியாது, என்னுயிர்கொண்டு தந்து, என்னைக் 
      கரைக்கண் உய்த்துப்போயினான், அன்று என்
      நாணினால் நினக்கு அதனைச் சொல்ல 
      மாட்டிற்றிலேன், இன்று இவ்வாறாயின பின் இது
      கூறினேன், இனி நினக்கடுப்பது 
      செய்வாயாகவெனத்
      தோழிக்குத் தலைமகள் அறத்தொடு
      நில்லாநிற்றல். 
      (வ-று.) 
      வண்டலுற் றேமெங்கண் வந்தொரு
      தோன்றல் வரிவளையீர் 
      உண்டலுற் றேமென்று நின்றதொர்
      போழ்துடை யான்புலியூர்க் 
      கொண்டலுற் றேறுங் கடல்வர
      எம்முயிர் கொண்டுதந்து 
      கண்டலுற் றேர்நின்ற சேரிச்சென்
      றானொர் கழலவனே. (திருக். 290) 
      ஐயந்தீரக் கூறல் 
      என்பது, எம்பெருமாற்குப்
      பழிவருமோவென்று ஐயுற்று அறத்தொடு நின்ற 
      தலைமகள் குறிப்பறிந்த தோழி, அவளையந்தீர,
      நங்குடிக்குப் பழிவரினும் அவற்குப் பழி 
      வாராமல் மறைத்துக் கூறு மாறென்னோவெனத்,
      தான் தலைமகளைப் பாதுகாத்தல் தோன்றக் 
      கூறா
      நிற்றல். 
      (வ-று.) 
      குடிக்கலர் கூறினுங் கூறா
      வியன்றில்லைக் கூத்தனதாள் 
      முடிக்கல ராக்குமொய் பூந்துறை வற்கு
      முரிபுருவ 
      வடிக்கலர் வேற்கண்ணி வந்தன
      சென்றுநம் யாயறியும் 
      படிக்கல ராமிவை யென்னாம்
      மறைக்கும் பரிசுகளே. (திருக். 291) 
      வெறிவிலக்கல் 
      என்பது, தலைமகளை ஐயந்தீர்த்து,
      வெறிக்களத்தே சென்று, வேலனை நோக்கிப், 
      புனலிடைவீழ்ந்து கெடப்புகவந் தெடுத்துய்த்த
      கதிர்த்தோள் நிற்க, இந்நோய்
      தீர்த்தற்குப் 
      பிறிதோருபாயத்தைக் கருதும்
      நின்னைப்போல, இவ்வுலகத்தின்கண் அறி
      வுடையாரில்லை 
      யென, மேலறத்தொடு
      நிற்பாளாகத்தோழி வெறிவிலக்கல். 
			
				
				 |