| பொருளதிகாரம் | 362 | முத்துவீரியம் |  
  
25. மணஞ் சிறப்புரைத்தல் 
      854. வரைந்த பின்னர்
      மணஞ்சிறப்புக் கூறாநிற்றல் 
           மணமுரசு கூறலு மகிழ்ந் துரைத்தலும் 
           வழிபாடு கூறலும் வாழ்க்கைநலங்
      கூறலுங் 
           காதல்கட் டுரைத்தலுங் கற்பறி
      வித்தலுங் 
           கற்புப்பயப் புரைத்தலுங் காதன்மரு
      வுரைத்தலுங் 
           கலவி யுரைத்தலுங் கருதிய
      வொன்பதும் 
           நலமிகு மணமிவை நாடுங் காலே. 
      என்பது, மணமுரசு கூறல்,
      மகிழ்ந்துரைத்தல், வழிபாடு கூறல், வாழ்க்கை 
      நலங்கூறல், காதல் கட்டுரைத்தல்,
      கற்பறிவித்தல், கற்புப்பயப் புரைத்தல், 
      மருவுதலுரைத்தல், கலவியின்பங்கூறல் ஆகிய
      வொன்பதும் மணஞ் சிறப்புரைத்தலாம். 
      மணமுரசு கூறல் 
      என்பது, வரைபொருட் பிரிந்து
      வந்தபின்னர், அருங்கலம் விடுத்தற்கு 
      முன்றிற்கணின்று தலைமகனது முரசு முழங்கக்கண்டு
      மகிழ்வுற்ற தோழி, நாம் துயரந்தீர 
      நம்மில்லின்கட் புகுந்து நின்று யானை
      கடிந்தார் முரசு முழங்குகின்றது, இனியென்ன 
      குறையுடையோமென, வரைவு தோன்றத் தலைமகளுக்கு
      மணமுரசு கூறாநிற்றல். 
      (வ-று.) 
      பிரசந் திகழும் வரைபுரை யானையின்
      பீடழித்தார் 
      முரசந் திகழும் முருகியம் நீங்கும்
      எவர்க்குமுன்னாம் 
      அரசம் பலத்துநின் றாடும்
      பிரானருள் பெற்றவரிற் 
      புரைசந்த மேகலை யாய்துயர் தீரப்
      புகுந்துநின்றே. (திருக். 299) 
      மகிழ்ந்துரைத்தல் 
      என்பது, மணமுரசொலி கேட்ட
      தோழி, சிலம்பன்தந்த பெறுதற்கரிய தழைகளை 
      வாடாமல்வைத்து, அத்தழையே பற்றுக் கோடாக
      வாற்றியிருந்தாளெனத், தலைமகளைத் 
      தன்னுள்ளே
      மகிழ்ந்து கூறல். 
      (வ-று.) 
      இருந்துதி யென்வயிற் கொண்டவன்
      யானெப் பொழுதுமுன்னும் 
      மருந்து திசைமுகன் மாற்கரி
      யோன்றில்லை வாழ்த்தினர்போல் 
			
				
				 |