| பொருளதிகாரம் | 386 | முத்துவீரியம் |  
  
31. பரத்தையிற்
      பிரிவு 
      என்பது, தலைமகளை வரைந்து எய்திய
      பின்னர், வைகலும் பாலே 
      நுகர்வானொருவன் இடையே புளிங்காடியும்
      நுகர்ந்து அதனினிமையை அறிந்தாற்போல, 
      அவள்
      நுகர்ச்சி இனிமை அறிதற்குப் புறப்பெண்டீர் மாட்டுப் பிரியா
      நிற்றல், அல்லதூஉம், 
      பண்ணும்
      பாடலு முதலாயின காட்டிப் புறப்பெண்டீர், தன்னைக்
      காதலித்தால் தான் 
      எல்லார்க்குந் தலைவனாகலின்,
      அவர்க்கும் இன்பஞ் செய்யப்
      பிரியா நிற்றல் என்றுமாம், 
      அல்லதூஉம், தலைமகளை ஊடலறிவித்தற்குப் பிரிதல்
      என்றுமாம். இவ்வாறொழிந்து 
      தனக்கு இன்பம் வேண்டிப் பிரிவனாயின, இவளுக்குத்
      தலைமகள் என்னும் பெயரோடு 
      மாறுபட்டுத் தனது பெருமையோடு
      மாறுபடா நிற்கும். 
      அதன் வகை 
      861. கண்டவர் கூறலுங்
      காதற் றோழி 
           பொறையுவந் துரைத்தலும்
      பொதுப்படக் கூறி 
           வாடி யழுங்கலு மாறுகொண் டவனொடு 
           கனவிழந் துரைத்தலும் விளக்கொடு
      வெறுத்தலும் 
           வாரம் பகர்ந்து வாயின் மறுத்தலும் 
           பள்ளியிடத் தூடலும் பணிமொழி
      யாடன் 
           செவ்வணி விடுக்க வில்லோர்
      கூறலும் 
           அயலறி வுரைத்தவ ளழுக்க மெய்தலும் 
           செவ்வணி கண்ட வாயிலவர் கூறலும் 
           மனைபுகல் கண்ட வாயிலவர் கூறலு 
           முகமலர்ச்சி கூறலு முனிவ தென்னெனக் 
           காலநிகழ் வுரைத்தலுங் கலவி யெய்தலை 
           எடுத்துப் பகரலுங் கலவியைக்
      கருதிப் 
           புலத்தலுங் குறிப்பறிந்து புலந்தமை
      கூறலும் 
           வாயிலவர் வாழ்த்தலும் புனல்வர
      வுரைத்தலுந் 
           தேர்கண்டு மகிழ்தலுஞ் சேடியர் விழவிற் 
           றம்மு ளுரைத்தலுந் தன்னை வியத்தலும் 
           நகைத்துக் கூறலு நாண்கண் டியம்பலும் 
           பாணன்வர வுரைத்தலும்
      பாங்கியியற் பழித்துலும் 
           உழையரியற் பழித்தலு மொண்ணுத லாளவற் 
           கியற்பட மொழிதலு மியல்புனைந் துரைத்தலும் 
			
				
				 |