பொருளதிகாரம்393முத்துவீரியம்

(வ-று.)

வில்லிகைப் போதின் விரும்பா அரும்பா வியர்களன்பிற்
செல்லிகைப் போதின் எரியுடை யோன்றில்லை யம்பலஞ்சூழ்
மல்லிகைப் போதின்வெண் சங்கம்வண் டூதவிண் டோய்பிறையோ
டெல்லிகைப் போதியல் வேல்வய லூரற் கெதிர்கொண்டதே. (திருக். 364)

எய்தலெடுத்துரைத்தல்

என்பது, பரத்தையிற் பிரிந்துவந்த தலைமகன், பூப்புநிகழ்ந்த கிழத்தியைப்
புலவிதீர்த்து, இன்புறப் பண்ணி யெய்தலுற்று மகிழ்ந்தமையை, அவ்விடத்துள்ளாரெடுத்
துரைத்தல்.

(வ-று.)

புலவித் திரைபொரச் சீறடிப் பூங்கலஞ் சென்னியுய்ப்பக்
கலவிக் கடலுட் கலிங்கஞ்சென் றெய்திக் கதிர்கொண்முத்தம்
நிலவி நிறைமது ஆர்ந்தம் பலத்துநின் றோனருள்போன்
றுலவிய லாத்தனம் சென்றெய்த லாயின ஊரனுக்கே. (திருக். 365)

கலவி கருதிப் புலத்தல்

என்பது, புலவிதீர்த்தின்புறப் புணரப்பட்டு மயங்கிய தலைமகள் தனக்கவன் செய்த
தலையளியை நினைந்திவ்வா றருளுமருளொரு ஞான்று பிறர்க்குமாமென வுட்கொண்டு,
பொருமியழுது, பின்னும் அவனொடு கலவி கருதிப் புலத்தல்.

(வ-று.)

செவ்வாய் துடிப்பக் கரூங்கண் பிறழச்சிற் றம்பலத்தெம்
மொய்வார் சடையோன் அருளின் முயங்கி மயங்குகின்றாள்
வெவ்வா யுயிர்ப்பொடு விம்மிக் கலுழ்ந்து புலந்துநைந்தாள்
இவ்வா றருள்பிறர்க் காகும் எனநினைந் தின்னகையே. (திருக். 366)

குறிப்பறிந்து புலந்தமை கூறல்

என்பது, புலவிதீர்ந்து கலுழ்ந்து புணர்ந்து தானுமவனுமேயாய்ப்
பள்ளியிடத்தாளாகிய தலைமகள், பின்னும் ஒரு குறிப்பு வேறுபாடு கண்டு புலந்து,
இப்பள்ளி பலரைப் பொறாதென்றிழிய, இப்பொழுது இவள் இவ்வாறிழிதற்குக் கருதிய
குறிப்பென்னை கொல்லோவென, உழையர் தம்முட் கூறா நிற்றல்.