பொருளதிகாரம்399முத்துவீரியம்

(வ-று.)

தேன்வண் டுறைதரு கொன்றையன் சிற்றம் பலம்வழுத்தும்
வான்வண் டுறைதரு வாய்மையன் மன்னு குதலையின்வா
யான்வண் டுறைதரு மாலமு தன்னவன் வந்தணையான்
நான்வண் டுறைதரு கொங்கையெவ் வாறுகொல் நண்ணுவதே. (திருக். 380)

வாயிற்கணின்று தோழிக்குரைத்தல்

என்பது, வாயில் பெறாது மகன்றிற நினையாநின்ற தலைமகன், நல்ல நாட்டுப்
பொலியும் மகளிர்தங் கண்ணினையான் வந்த அச்சத்தால் வந்த மயக்கத்தால் உண்டாகிய
வாட்டத்தை நீக்காத இவ்விரதம் யாதாமென, வாயில் வேண்டித் தோழிக்குக் கூறா நிற்றல்.

(வ-று.)

கயல்வந்த கண்ணியர் கண்ணிணை யான்மிகு காதரத்தான்
மயல்வந்த வாட்டம் அகற்றா விரதமென் மாமதியின்
அயல்வந்த ஆடர வாடவைத் தோனம் பலநிலவு
புயல்வந்த மாமதிற் றில்லைநன் னாட்டுப் பொலிபவரே. (திருக். 381)

வாயில்வேண்டத் தோழி கூறல்

என்பது, வாயில் வேண்டிய தலைமகனுக்குப் பண்டு நீர் வரும் வழியிடை
வருமேதமும் இருளும் எண்ணாது கன்றை அகன்ற ஈற்றாவை யொத்து எம்மாட்டு வருதிர்,
என்று எம் பொருந்தாதார் தெருவே அன்றெம்மாட்டு ஊர்ந்து வந்த தேர்மேலேறிப் போகா
நின்றீர், இதுவன்றோ எம்மாட்டு நுமதருளெனத் தோழி அவன் செய்தி கூறாநிற்றல்.

(வ-று.)

கூற்றா யினசின ஆளியெண் ணீர்கண்கள் கோளிழித்தால்
போற்றான் செறியிருட் பொக்கமெண் ணீர்கன் றகன்றபுனிற்
றீற்றா எனநீர் வருவது பண்டின்றெம் ஈசர்தில்லைத்
தேற்றார் கொடிநெடு வீதியிற் போதிரத் தேர்மிசையே. (திருக். 382)