பொருளதிகாரம்401முத்துவீரியம்

(வ-று.)

உடைமணி கட்டிச் சிறுதே ருருட்டி யுலாத்தருமிந்
நடைமணி யைத்தந்த பின்னர்முன் நான்முகன் மாலறியா
விடைமணி கண்டர்வண் டில்லைமென் றோகையன் னார்கண் முன்னம்
கடைமணி வாணகை யாயின்று கண்டனர் காதலரே. (திருக். 385)

பாணனொடு வெகுளல்

என்பது, தோழிக்கு வாயின் மறுத்த தலைமகள், நின்னிடத்து அவர் நீங்காத அருள்
பெரியரென்று நீ சொல்ல வேண்டுமோ, அது கிடக்க, கொற்சேரியிலூசிவிற்றுப், புலையா,
எம்மில்லத்து நின்னுடைய நல்ல நல்ல பொய்யைப் பொருந்தி நிற்கலுற்றோ நீ
போந்ததென, வாயில் வேண்டிய பாணனொடு வெகுண்டு கூறல்.

(வ-று.)

மைகொண்ட கண்டர் வயல்கொண்ட தில்லைமல் கூரர்நின்வாய்
மெய்கொண்ட அன்பின ரென்பதென் விள்ளா அருள்பெரியர்
வைகொண்ட வூசிகொற் சேரியின் விற்றெம்மில் வண்ணவண்ணப்
பொய்கொண்டு நிற்கலுற் றோபுலை யாத்தின்னி போந்ததுவே. (திருக். 386)

பாணன் புலந்துரைத்தல்

என்பது, தலைமகள் வெகுண்டு உரையாநிற்ப, நின்புருவம் நெரிய, வாய் துடிப்ப,
என்னை யெறிதற்குக் கல்லெடுக்க வேண்டா, நினது கரிய கண்களின் சிவப்பாற்றுவாயாக, நீ
வெகுளப்படுவதன்று, நினக்குப் பல்லாண்டு செல்வதாக, யான் வேண்டிய விடத்துப்போக
நின் அடியை வலங்கொள்ளா நின்றேனென, வாயில் பெறாமையிற் பாணன் புலந்து கூறல்.

(வ-று.)

கொல்லாண் டிலங்கு மழுப்படை யோன்குளிர் தில்லையன்னாய்
வில்லாண் டிலங்கு புருவம் நெரியச்செவ் வாய்துடிப்பக்
கல்லாண் டெடேல்கருங் கண்சிவப் பாற்று கறுப்பதன்று
பல்லாண் டடியேன் அடிவலங் கொள்வன் பணிமொழியே. (திருக். 387)